Advertisement

100 நாள், ரூ.50 கோடி : அறிமுக படத்திலேயே அசத்திய வாரிசு

கடந்த ஜனவரி மாதம் மோகன்லால் மகன் பிரணவ் ஹீரோவாக அறிமுகமான 'ஆதி' படம் வெளியானது. ஜீத்து ஜோசப் இந்தப்படத்தை இயக்கியிருந்தார். ஒரு அறிமுக நடிகரின் படம் வெளியாகி ஒரு மாதம் தாண்டி ஓடுவதே சிரமம் என்கிற நிலையில் தற்போது 1௦௦வது நாளை நோக்கி ஓடிக்கொண்டு இருப்பதுடன், 5௦ கோடி ரூபாய் வசூலையும் தாண்டி மலையாள திரையுலகையே வாய்பிளக்க வைத்துள்ளது 'ஆதி'.

துல்கர் சல்மான், பஹத் பாசில் ஆகிய வாரிசு நடிகர்கள் அறிமுகமானபோது கூட இப்படி ஒரு அதிசயம் நடந்ததில்லை. ஆனால் மோகன்லால் மகன் பிரணவ் நடித்த 'ஆதி' அதை சாத்தியமாக்கி இருக்கிறது. ஒரு அறிமுக ஹீரோவின் படம் 5௦ கோடி வசூலிப்பது என்கிற பெருமையை மலையாள திரையுலகிலேயே, ஏன் இந்திய திரையுலகிலேயே முதல் ஆளாக பிரணவ் மோகன்லால் தான் பெறுகிறார் என்றே சொல்லலாம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • True Tamilan - Ramnad,இந்தியா

    அப்போ பருத்திவீரன் படத்தை என்ன சொல்வீங்க

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement