Advertisement

ஹீரோவாக அறிமுகமாகும் நஸ்ரியாவின் சகோதரர்

முன்னணி நடிகையாக வளர்ந்த சமயத்தில் நடிகர் பஹத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு ஒதுங்கினார் நடிகை நஸ்ரியா. தற்போது அவரது வீட்டிலிருந்து இன்னொரு நபர் சினிமாவில் அறிமுகம் ஆகிறார். அவர் நஸ்ரியாவின் சகோதரர் நவீன் நாசிம் தான்.

இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான் 'குப்பி' படம் விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்றது. தற்போது முன்னணி ஹீரோவாக மாறியுள்ள டொவினோ தாமஸுக்கு கதாநாயகன் அந்தஸ்து வழங்கிய இந்தப்படத்தை இயக்குனர் ஜான்பால் ஜார்ஜ் இயக்கியிருந்தார். தற்போது இவர்தான் நஸ்ரியாவின் தம்பியையும் ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார்.

இந்தப்படத்தில் முன்னணி காமெடி நடிகரான சௌபின் சாஹிரும் இன்னொரு கதாநாயகனாக முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். கதாநாயகியாக தன்வி ராம் என்கிற புதுமுகம் அறிமுகமாகிறார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement