Advertisement

மே 6-ல் மலையாள சினிமா நட்சத்திர கலைவிழா

தமிழ் சினிமாவை போல அல்லாமல், அடிக்கடி ஏதோ ஒரு பெயரில் நட்சத்திர கலைவிழா நடத்தி வருவது தான் மலையாள திரையுலகம். அந்தவகையில் இந்த ஆண்டு 'அம்மா மழவில்லு' என நடிகர் சங்கத்தின் பெயராலேயே வரும் மே-6ஆம் தேதி நட்சத்திர கலைவிழா நடத்தவுள்ளனர். இதற்கான துவக்கவிழா நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மோகன்லால், மம்முட்டி, நடிகர்சங்க தலைவர் இன்னொசன்ட், இயக்குனர் சித்திக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வரும் மே-6ல் திருவனந்தபுரத்தில் க்ரீன்பீல்டு பன்னாட்டு மைதானத்தில் சுமார் 5 மணி நேரம் இந்த கலைவிழா நடைபெற உள்ளது. வரும் ஏப்-27 முதல் இந்த நிகழ்ச்சிக்கான ரிகர்சல் துவங்குகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement