Advertisement

மீண்டும் சத்யன் அந்திக்காடு டைரக்சனில் பஹத் பாசில்

மலையாள சினிமாவில் கிட்டத்தட்ட 35 வருடங்களாக மாஸ் இயக்குனராக வலம்வருபவர் சீனியர் இயக்குனர் சத்யன் அந்திக்காடு. இளம் இயக்குனர்களின் படங்களாக தேடி நடித்து வரும் இளம் நடிகர்கள் கூட, இவர் டைரக்சனில் விரும்பி நடிக்க ஓடி வருகிறார்கள். இவரது இயக்கத்தில் துல்கர் சல்மான், நிவின்பாலி, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர்.

துல்கர் நடித்த 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' படத்தை கடந்த வருடம் இயக்கி வெளியிட்ட சத்யன் அந்திக்காடு, தற்போது பஹத் பாசில் படத்தை இயக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிட்டு விட்டார்கள். படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் துவங்கவுள்ளது. இந்தப்படத்திற்கு பிரபல நடிகரும் கதாசிரியருமான சீனிவாசன் தான் கதை எழுதுகிறார். ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார்.

கடந்த 2௦13ல் அடித்த 'த்ரிஷ்யம்' புயலில் இருந்து தப்பித்த ஒரே மலையாள படம் என்கிற பெருமையை கொண்ட படம் பஹத் பாசில்-சத்யன் அந்திக்காடு கூட்டணியில் வெளியான 'ஒரு இந்தியன் பிரணயகதா'. இந்தப்படத்தை தொடர்ந்து தற்போது இருவரும் மீண்டும் இரண்டாவது முறையாக இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement