Advertisement

ராகுலுக்காக பாட்ஷா பாடலை பாடிய நக்மா

ரஜினியின் சினிமா பயணத்தில் பாட்ஷா படமும் முக்கியமான ஒன்று. சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நக்மா நடித்தார். தற்போது, இவர் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொது செயலாளராக உள்ளார்.

தற்போது அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நக்மா, பாண்டிச்சேரியில் சோரப்பட்டு என்ற கிராமத்தில் பெண்களை சந்தித்து பேசினார். அப்போது ரஜினியின் பாட்ஷா படத்தில் இடம்பெற்ற, நீ நடந்தால் நடையழகு, ஸ்டைலு ஸ்டைலு தான்... பாடல்களை பாடி அசத்தினார்.

மேலும் இந்தப்பாடல் ரஜினிக்காக அல்ல, ராகுலுக்காக அவர் தான் நம்முடைய பாட்ஷா என்றார் நக்மா.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement