Advertisement

காதலர் தினத்தில் ரசிகர்களை ஈர்த்த சினிமாக்காரர்கள்

இன்று காதலர் தினம் என்பதால், பல படங்கள் தங்களது பர்ஸ்ட்லுக், பாடல், சிங்கிள் வீடியோ, டீசர் என ஏதோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க முண்டியடித்தனர். அந்தவகையில் நேற்று மட்டும் சுமார் 6 பாடல்கள் வெளியாகி உள்ளன.

ஹரீஷ் கல்யாண் - ரைசா நடித்துள்ள பியார் பிரேமா காதல் படத்திலிருந்து "ஹை ஆன் லவ்..." என்கிற பாடல், விஜய் சேதுபதி - சாயிஷா நடித்துள்ள ஜூங்கா படத்திலிருந்து "கூட்டிட்டு போ கூடவே" பாடலும், விஷால் - சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள இரும்புத்திரை படத்திலிருந்து "ஆங்கிரி பேர்டு" என்ற பாடலும் வெளியாகி உள்ளது.

இதுதவிர அனிருத் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் "ஜூலி" என்ற ஆல்பம் 7 மணிக்கு வெளியாகிறது. கவுதம் மேனன் இயக்கத்தில் உலவிரவு என்ற ஆல்பமும் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement