Advertisement

சினிமாவிற்கு கமல் குட்-பை

அரசியல் களம் காண உள்ள நடிகர் கமல்ஹாசன் சினிமாவிற்கு குட்-பை சொல்லிவிட்டு, முழுநேர அரசியல்வாதியாக மாற உள்ளார். வருகிற பிப்., 21-ம் தேதி தனது அரசியல் பயணத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் துவங்குகிறார். தொடர்ந்து அன்றைய தினம் மதுரையில் முதல் மாநாடு நடக்க இருக்கிறது.

கமல்ஹாசன், தற்போது விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் விஸ்வரூபம் 2 படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. சபாஷ் நாயுடு, பாதிக்கு மேல் முடிந்துள்ளது. இதுதவிர இந்தியன் 2 படத்திலும் நடிக்க உள்ளார். இதன் பிறகு கமல் நடிக்க மாட்டார் என தெரிகிறது.

அமெரிக்காவின் ஹார்வெர்டு பல்கலைக்கழகத்தில் அங்குள்ள தமிழர்களிடம் கமல் பேசும்போது, அரசியலில் ஈடுபடவுள்ளதால், படங்களில் நடிக்க நேரம் கிடைக்குமா தெரியவில்லை என குறிப்பிட்டார். மேலும் ஆங்கில டிவி சேனல் ஒன்றில், "வெளிவர இருக்கும் இரண்டு படங்களை தொடர்ந்து வேறு படங்களில் நடிக்க எண்ணமில்லை" என்று கூறியுள்ளார்.

இதன் மூலம், சினிமாவை விட்டு கமல் விலகுவார் என தெரிகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (14)

 • anand - Chennai,இந்தியா

  அப்புறம் இப்ப யார் தலைவா?

 • subramanian - coimbatore,இந்தியா

  இவர் ஏற்கனவே சினிமாவில் செல்லாக்காசு, இப்பொது வேறு வழியில்லாமல், எப்படியாவது பொது வெளியில் உலவும் நோக்கோடு அரசியல் பிரவேசம் செய்கிறார், இவரின் வாழ்வியல் முறைஆனது கட்டுப்பாடுகள்,ஒழுக்கங்கள்,நெறிமுறைகள் அற்ற தான்தோன்றித்தனமானது,இவருக்கு தலைவன் ஆவதோ,ஆளும் அதிகாரம் பெறுவதோ, சற்றும் பொருத்தம் மற்றும் அருகதை அற்றது. என்று கர்மவீரரை தோற்கடித்து அரசியலை தோற்கடித்த தமிழக மக்கள் அதன் விளைவை இன்று வரை அனுபவித்து வருகிறார்கள், அதன் நீட்சியே இந்த கந்தர கோலம்.

 • Pillai Rm - nagapattinam,இந்தியா

  அடுத்தாப்ல அரசியலை உட்டு போறேன்னு சொன்னா தேவல ....

 • Krishnakum - Chennai,இந்தியா

  என்ன கமல்ஜி..அமெரிக்காவில பேசும்போ சினிமாவுக்கு குட் பை எங்குறீங்க.....தமிழ் நாட்டுல பேசும்போ சினிமாவுல நடிப்பேன் எங்குறீங்க ..ரஜினி சைலென்றா இருந்து தனது இயக்கத்துக்கான உள் கட்டமைப்பை உருவாக்குறாரு ...நீங்க என்ன மாற்றி மாற்றி பேசுறீங்க ...தமிழ் நாட்டு எல்லாம் சைலென்றா கவனிக்கிறாங்க ...

 • Rengarajan Veerasamy - chennai,இந்தியா

  அப்பா தமிழ்நாட்டுக்கு நல்லகாலம்தான். ஓகே ஓகே

 • anand - Chennai,இந்தியா

  எங்கு பணம் அதிகம் கிடைக்குமோ அங்கு தானே எல்லோரும் போவார்கள்..சினிமாவை விட அதிகம் சம்பாதிக்கலாம் என்று யாராவது சொல்லி இருப்பார்கள்

 • kumaresan - Petaling Jaya,மலேஷியா

  இது முன்பே, அதாவது என்றைக்கு அரசியலில் நுழைகிறார் என்று அறிவித்தாரோ அன்றே இனி சினிமாவில் தனக்கு மவுசு குறைந்ததினால் தான் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்பட்டி பிழைக்க வழி தேடி வருபவர் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர் அல்ல . மாறாக சுயனவாதிகள் தான். மக்கள் இதனை உணர வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கொள்வோம் .

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  கமல் சினிமாவிற்கு குட் பையா .... ?சினிமா கமலிற்கு குட் பையா ?

 • rmr - chennai,இந்தியா

  கூத்தாடிகளை நம்பி படித்த மக்கள் யாரும் ஏமாற போறது கிடையாது

 • tamilselvan - chennai,இந்தியா

  கமல் அவர்கள் சினிமா நடித்து தமிழ் நாடு மக்கள் பணத்தில் வாழந்த்திருக்கள் இபபோது திரைபட துறை உங்கள் வாயப்பு இல்லை அதனால் இன்னம் தமிழ் நாடு மக்கள் பணத்தில் வாழநினைக்கிறகள்

 • Babu Krishnan - atlanta,யூ.எஸ்.ஏ

  If he can do that then i can support him , but as long as he is involved with politics he shouldnt get involved in cinema. public service is 36 hours job not even 24 hours.

 • Somiah M - chennai,இந்தியா

  கமலுக்கு எல்லாம் முன்னோடியான மக்கள் திலகம் கூட அரசியலில் திடமாக கால் ஊன்றிய பின்னரே திரை தொழிலை விட்டார் .கமல் சிந்திக்க வேண்டும் .

 • மூக்குநோண்டி -

  ரொம்ப சந்தோஷம், போயி தொல.

 • teeran - new jersey,யூ.எஸ்.ஏ

  nalla mudivu

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement