Advertisement

மீண்டும் வந்தார் மமதி சாரி

20 ஆண்டு சேனல் அனுபவம் மிக்க தொகுப்பாளினி மமதி சாரி. ராஜ் டி.வியில் ஒளிபரப்பான சூப்பர் 6 நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமான மமதி சாரி அதே சேனலில் சூப்பர் காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் பின்னர் பிரேக் பாஸ்ட், ஹலோ தமிழா, சமையல் சமையல், ஜில்லுன்னு ஒரு ஜோடி, ஜில்லுன்னு ஒரு சேலன்ஞ், ராணி மகாராணி, செல்லமே செல்லம் உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

சொந்த காரணங்களுக்காக கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரையிலிருந்து விலகி இருந்தவர் இப்போது சீரியல் நடிகையாக திரும்பி வந்திருக்கிறார். தற்போது வாணி ராணி தொடரில் முக்கிய கேரக்டரில் அறிமுகமாகியிருக்கிறார். இந்த தொடரில் பப்லுவின் மனைவி கோகிலாவாக நடிக்கிறார். வில்லித்தனமான கேரக்டர் இது. தொடர்ந்து சீரியல்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் மமதி சாரி.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement