Advertisement

கட்சியை பதிவு செய்ய தீவிரம் : கமல் ஆலோசனை

நடிகர் கமல் வரும் 21-ம் தேதி அரசியல் பயணத்தை துவக்குகிறார். இந்நிலையில் நாளை (பிப்.15) அல்லது நாளை மறுநாள் கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் நேரம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுப்பற்றி கமல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கையில், கட்சியின் பெயர் ,கொடி, சின்னம் அறிவித்த பிறகு தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதா? அல்லது அதற்கு முன்பாகவே பதிவு செய்வதா என கமல் ஆலோசனை நடத்தி வருகிறார் என்றனர்.

இதனிடையே கமல், தன் நற்பணிமன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். பிப்., 21-ல் துவங்க இருக்கும் அரசியல் பயணம் குறித்தும், கட்சியின் பெயரை பதிவு செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement