Advertisement

அடுத்த கட்டத்திற்கு நகரும் ரஜினிகாந்த்

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் திரையுலகத்திலிருந்து புதிதாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் நுழைந்துள்ளார்கள். இருவருமே அவர்களது புதிய கட்சியைத் துவக்குவதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டார்கள்.

ரஜினிகாந்த் கடந்த ஆண்டு இரு கட்டமாக அவரது ரசிகர்களைச் சந்தித்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். ஒவ்வொரு நாளிலும் ரசிகர்கள் முன்னிலையில் பேசி அவர்களை உற்சாகப்படுத்தினார். கடைசி நாளில் ஆன்மீக அரசியல் என்ற புதிய அரசியலை உருவாக்கப் போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

கமல்ஹாசன் ஹார்வர்டு பல்கலைக்கழம் வரை சென்று உரையாற்றி அவருடைய அரசியல் களம் வேறு என்பதைப் புரிய வைக்கும் முயற்சியில் இருக்கிறார். பிப்ரவரி 21ம் தேதி முதல் தன்னுடைய அரசியல் சுற்று பயணத்தை கமல்ஹாசன் ஆரம்பிக்க உள்ளார்.

ரஜினிகாந்தும் இப்போது அடுத்த கட்ட நகர்வுக்கு செல்ல உள்ளார். நாளை(பிப்., 14) முதல் மூன்று நாட்களுக்கு அவருடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்திக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. அவர்களது கருத்துக்களைக் கேட்டறிந்த பிறகு ரஜினிகாந்த் அவருடைய அடுத்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (40)

 • kabali tamilnadu - madurai,இந்தியா

  ரஜினி 2019 cm

 • Raman Ganesan - Madurai,இந்தியா

  கோபால் நீங்க எப்பவும் குக்கருக்கு ஓட்டு போடுங்க அது தான் உங்க அடையாளம் கருணா நீங்க முதல்ல தமிழ்நாட்டுக்கு வாங்க ஆஹா என்ன தமிழ் பாசம் தமிழன் இளிச்சவாயன் சரி தானே

 • vickram - madurai,இந்தியா

  ivanunge cinemala than potti poturanunge nu patha ingayum vanthu potti poturange ivange vanthu natta kapatha.

 • Raman Ganesan - Madurai,இந்தியா

  இங்க ரஜினி பத்தி எந்த செய்தி வந்தாலும் உடனே விமர்சனம் பண்ணும் தமிழ் ஆர்வலர்கள் காமராஜருக்கு பிறகு நீங்க இதுவரைக்கும் ஓட்டு போட்ட ஒரு நல்ல தலைவன காட்டுங்க அப்புறம் பேசுங்க

 • Rajavelu E. - Gummidipoondi,இந்தியா

  ரஜினி நல்லவராகவே இருந்தாலும் ஒரு மராட்டிய கன்னடர் எங்களுக்கு தேவையில்லை. நாங்கள் தமிழரில் நல்லவரை தேர்வு செய்வோம்.

  • rdkumar - ,

   Romba nalla therndhetutheenga.. idhuvaraikum.. porkala aatchi allava nadakuthu

 • Gopal Thiyagarajan - Chennai,இந்தியா

  எத்தனை கட்டங்கள் நகர்ந்தாலும், உங்களது கட்சி ஒரு இடத்தில கூட வெற்றி பெற முடியாது. இனிமேல் வரும் உங்களது படங்களும் தோல்வியைத்தான் சந்திக்கும். விரைவில் நீங்கள் நடத்திவரும் பள்ளிக்கு வாடகை கொடுத்து சரி செய்யவும்.

  • rdkumar - ,

   apdiye election la yaar yaar evlo seat vaanguvanga, eppo cyclone varum, disaster varum nu, 2029 la yaaru PM ellathayum predict pannidunga mr.nostradamus

  • Rama Moorthy - kumbakonam,இந்தியா

   ஏம்பா உனக்கு வேற வேலையே இல்லையா ?நாடு நல்லாயிருக்க ரஜினி சார் முயற்சி பண்ணுவது உனக்குப் பிடிக்காவிட்டால் வேற ஏதாவதுவேலையைப் பாருப்பா..

  • Rama Moorthy - kumbakonam,இந்தியா

   இப்படிக் கருத்து சொல்பவன் எல்லாம் திருடர்களே .

  • sridharan - chennai,இந்தியா

   indha siriya viyabhaaraththye sari seiyaadhavar naattin taththai sariseiyapogiraraa?

 • Karun Muruga - banglore,இந்தியா

  காடு வா வா இங்குது வீடு போ போ இங்குது இப்போ போய்..ஏன் இந்த வெட்டி வேல....தமிழன் இளிச்சவாயன் சரிதானே

  • rdkumar - ,

   aama, Stalin, karuna, vaiko, sasikala ivangalukuku la kaadu poa poa, veedu vaa va soluthu..

  • rdkumar - ,

   death is not about age.. Can happen even to 20s and ppl can live well in 90s. age is not at all a factor.. its only the great ideas and intention to do welfare for ppl.

  • rdkumar - ,

   vayathai vaithu yaarayum kindal seyaatheergal.. adhaivida kevalamana seyal edhum illai.. orivelai idhuvum thamizhanda panbugalil ondro?

 • K.Sugavanam - Salem,இந்தியா

  அடுத்து ஆஸ்ரம் பல்கலைக்கழகத்தில் ரசினி உரை நிகழ்த்துவார்..

 • Kannan Iyer - Bangalore,இந்தியா

  இருவரும் தங்கள் கட்சியை அறிவிக்கும் போது, தங்கள் கொள்கை, எலெக்ஷன் அறிக்கை, என்ன திட்டம் எத்தனை ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுவார்கள் அவர்களுடைய நிழல் மந்திரி சபை, அதன் உறுப்பினர்களுக்கு அந்தந்த பதவி வகிக்க இருக்கும் தகுதி போன்ற விவரங்களையும் அறிவிக்க வேண்டும். அப்போது தான் மக்களுக்கு ஒரு தெளிவான பிக்சர் கிடைக்கும்.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  இவரு தன்னுடைய படத்தின் வசூலுக்காக வெளியிடும் டீசர்தான் இந்த "ரசிகர்கர்களை சந்திப்பது". இவர் சத்தியமாக தமிழகத்துக்கு எதுவுமே செய்யப் போவது இல்லை. ஆனாலும் இன்னும் இவரை நம்பி ஒரு கூட்டம் தங்களின் பொன்னான நேரத்தை வீணடிப்பதுதான் வேதனையான விஷயம். ("நாராயணா, படத்தின் ஏரியாவெல்லாம் பேசி முடிச்சாச்சா? நமக்கு வசூல்தான் முக்கியம்").

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  நத்தையை விட படு வேகமாக நகருகிறது.

 • rdkumar -

  நடிகர்கள் அரசியலுக்கு வருவதை ஏற்கும் மக்கள் முட்டாள் ரசிகர்கள் - நடுநிலையாளர்கள் .. அப்போ ஊழல்வாதிகள், கொள்ளையர்கள், கொலைகாரர்கள், மதவாதிகள்,மணல் மாபியா,மெடிக்கல் மாபியா, மத சார்பற்ற ஜாதி தலைவர்கள்,ஜாதி சார்பற்ற மத போதகர்கள் என பல உத்தமர்களை தேர்தெடுத்த இந்த அதிபுத்திசாலிகள்,நடிகர்களை மட்டும் ஏற்றுக்கொள்வதில்லை. வெறும் மீம்ஸ் பார்த்து உலக நடப்பை தெரிந்து கொள்ளும் இவர்களுக்கு, திரையில் நடிப்பவர்களை விட நிஜத்தில் நடிப்பவர்கள் மீது அளவு கடந்த மோகம்..!

 • rdkumar -

  #FANSHARES ரஜினியை திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, பாமக, சீமான், வேல்முருகன், கௌதமன், உதயகுமார், திருமுருகன் காந்தி, அமீர், பாரதிராஜா தற்போது சரத்குமார் என்று அனைவரும் போட்டி போட்டுக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். ரஜினி இன்னும் கட்சிப் பெயரைக் கூட அறிவிக்கவில்லை, அதற்குள் என்னமோ இதுவரை ரஜினி தான் தமிழகத்தை ஆட்சி செய்தது போலவும், தற்போது ஆட்சி செய்வது போலவும் அவரே அனைத்துக்கும் பொறுப்பு என்பது போல பேசி வருகிறார்கள். இதுவரை இருந்தவர்கள் என்ன செய்தார்கள், தற்போது இருப்பவர்கள் ஏன் செய்யவில்லை என்று கேட்க இவர்கள் எவருக்கும் தோன்றவில்லை. அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ரஜினியே முதலாக கருத்தை தெரிவிக்க வேண்டும் தீர்வு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். “ரஜினி ரஜினி ரஜினி” என்று தூங்கி எழுந்தது முதல் படுக்கப்போகும் வரை அவரையே தொடர்ச்சியாகத் திட்டிக்கொண்டு இருக்கிறார்கள்

 • rdkumar -

  கடந்த 20 வருடங்களாக பல கிரிமினல் வழக்குகள், இன்னும் பல ஊழல் வழக்குகள், கணக்கிட முடியாத சொத்து குவிப்பு, இவை எல்லாத்தையும் விட பல வருடங்கள் வெளிநாட்டில் தலைமறைவு - இப்படிப்பட்ட ஒருத்தர் MLA ஆகலாமா கூடாதுனு ஒரு நாள் கூட விவாதம் நடத்தாத ஊடங்கங்கள் இன்று ரஜினி வரலாமா வரக்கூடாதான்னு கொந்தளிக்கின்றன.. இவை எல்லாம் தமிழகத்தை பிடித்த சாபக்கேடு !!

 • rdkumar -

  67 வயதிலும் 500 கோடி போட்டு படம் எடுக்க ஆளுங்க இருக்காங்க. இது தான் ரஜினி அவர் தொழிலில் செய்த சாதனை.. பத்தாயிரம் ருபாய் வாங்கிட்டு ஒட்டு போட்டவர்களுக்கு, பல ஆயிரம் கோடி பேரம் பேசி ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி மாறிய அயோக்கியர்களுக்கு இதெல்லாம் என்றும் புரியாது..

 • rdkumar -

  தமிழினத்திற்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாத பாபா மற்றும் பாபா முத்திரையை முன்னெடுத்து தமிழ் மக்களை ஏமாற்றுகிறார் ரஜினி - இயக்குனர் கவுதமன். இது தான் தமிழினத்தின் அடையாளம், கலாச்சாரம் என்று வரையறுக்க இவர் 2000 ஆண்டுகளாக வாழ்ந்து வருபவரா? யார் தமிழர்களின் கடவுள்? கிறிஸ்துவா? திருமாலா? சிவனா? அல்லாவா? புத்தரா? இங்கு ஹிந்துக்கள் தர்கா செல்கின்றனர்.. கிறிஸ்துவர்கள் தீபாவளி கொண்டாடுகின்றனர்.. மதச்சார்பின்மைக்கு அடையாளமாக இருக்கும் இங்கு,இவர்கள் தான் தமிழர்கள் என வரையறுக்க இவர்கள் யார்? இது தான் தமிழ் பண்பாடு,கலாச்சாரம் என திணிக்க இவ்ரகள் யார் ? உதயசூரியன், குக்கர் தமிழின முத்திரையா? MGR தொப்பி என்ன தமிழ் சமூதாயத்தின் பிரதிபலிப்பா? மூட நம்பிக்கையென்று சொல்லி பல தமிழ் திருவிழாக்களை திராவிட கட்சிகள் ஒழித்த போது ஏன் இந்த தமிழ் பற்று வரவில்லை? இந்த சமூதாயத்தில் காலம் காலமாக வழிபாட்டிலிருந்த பல காவல் தெய்வங்கள் காணாமல் போய்விட்டன.. இவருக்கு தமிழர்கள் வழிபட்ட எல்லா கடவுளும் தெரியுமா? கொள்ளை,கொலையில் ஈடுபட்டவர்கள் அரசியலில் தினம் தினம் வரும்போது ஏற்று கொள்ளும் தமிழ் போராளிகள், இப்போது கொந்தளிப்பது ஏன்? ஒரு வேலை இவையெல்லாம் தான் தமிழ் கலாச்சாரமா? கடவுள் வழிபாட்டில் கூட இனவெறியை புகுத்தும் இவர்களா தமிழ்நாட்டை காப்பாற்ற போகிறார்கள்? திடீரென்று வீறுகொண்டு செயல்படும் தமிழன்டா போராளிகளின் இனபற்றிக்குபின் ஒரு மதவாதமும் ஒளிந்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது..!

  • kamesh -

   super rd kumar

 • rdkumar -

  #வரலாறு 1996க்கு முந்தைய திமுக என்பது ஒரு ஐசியூ வில் இருந்தது என்பது வரலாறு. கிட்டதட்ட வைகோவுடன் சென்ற பகுதி தவிர மிஞ்சியிருந்தது ஒரு பாதி. அதைவிட மேலாக ராஜீவை கொன்ற கொலைபழியுடன், இயல்பாகவே மக்கள் விரும்பாத ஒரு கட்சியாகத்தான் இருந்தது என்பது அரசியலை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு தெரியும். இப்போது நிறைய பேருக்கு இது மறந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம். 1997 தேவகவுடா ஆட்சியை காங்கிரஸ் கவிழ்த்ததும் திமுகவை விலக்க சொல்லித்தான். இந்த ரணத்தை மறக்க காங்கிரசிற்கு 2004வரை ஆனது. இப்போதுவரை ராகுல் கலைஞரை பலமுறை பார்க்க வராமல் உதாசீனம் செய்வதின் பின்னுள்ள உளவியல் இதுதான். அந்த தேர்தலில் இன்னொரு பக்கம் மத்திய அரசு உதவியுடன், கட்சிக்கு இருக்கும் 18% வாக்கு வங்கி மற்றும் மூப்பனார் என்ற தலைவரை முன்னிருத்தி காங்கிரஸ் ஒருபக்கம் ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது. இதுபோக வைகோ இன்னொரு பக்கம். இன்றுள்ளதுபோல் அன்று அவர் காமெடி பீஸ் அல்ல. பாதி திமுக மாவட்ட செயலாளர்களுடன் பாதி கட்சி அவருடன் இருந்தது. தீப்பொறி பேச்சு, ஆவேசமானவர், இளைஞர் என்று ஆட்சிக்கான போட்டியில் அவரும் இருந்தார். ஜனதா தளம், மற்றும் கம்யூனிஸ்ட்கள் அவரை நம்பி கூட்டணியில் இருந்தனர். ரஜினியும், சோவும் இல்லையென்றால் வைகோ கை உயர்ந்து அப்போதே திமுக இறுதி நாட்கள் எழுதப் பட்டிருக்கும். ஆனால் காங்கிரஸை உடைத்து தமாகா என்று மூப்பனார் தலைமையில் புதுகட்சியாக்கி, திமுக கூட்டனிக்கு கொண்டுவந்து ரஜினியை ஆதரவளிக்க செய்தது வரை சோ செய்தது ஏராளம். தனக்கிருந்த செல்வாக்கு, கவர்ச்சியை முறையாக திருப்பி திமுக-தமாகா கூட்டனியை ஜெயிக்கவைத்தது ரஜினி என்னும் மந்திரசொல். போட்டியிட்ட 182 இடங்களில் 173 இடங்களை திமுக + தமாகா கைப்பற்றியது. ரஜினி வாய்ஸ் என்பது தான் சரித்திர உண்மை. ஜெ. உட்பட பல பேர் அந்த தேர்தலில் படு தோல்வி அடைந்தார்கள். தமாகா ஆரம்பிக்கப்பட்டதும் மூப்பனார் ரஜியினிடம் இது உங்கள் கட்சி என்று கூறினார். ரஜினி நினைத்திருந்தால் அன்றே எளிதாக முதல்வராகியிருப்பார். ஆனால் கருணாநிதி பெரியவராக இருக்கிறார் என்றும் மூப்பனார் நல்லவர் என்றும் சொல்லி இருவரையும் ஆதரித்து ரஜினி பேசிய வீடியோ சன் டிவியில் ஆயிரம் முறை மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. அது மட்டுமல்ல எனக்கு நன்கு நினைவிருக்கு. இரெண்டே போஸ்டர் தான் தமிழகம் முழுக்க முக்கியத்துவப் படுத்தபட்டு ஒவ்வொரு ஊரிலும் ஒட்டப்பட்டது. 1) ரஜினி புகைப்படத்துடன் “மீண்டும் ஜெ. ஆட்சிக்கு வந்தால் இந்த தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது” என்று ரஜினி பேசுவது போல ஒரு போஸ்டர். 2) வட்டமிடும் கழுகால் வசந்த சேனையால் திட்டமிட்டு அழியப் போகிறதா திராவிட இனம் ?? என்று ஜெ. பால்கனியில் நின்று இருப்பது போல ஒரு போஸ்டர். வழக்கமாக பெரிய பெரிய போஸ்டர்கள் அடிப்பதே திமுகவின் தேர்தல் உத்தி. வட்ட பிரதிநிதியில் இருந்து அந்த போஸ்டர்களில் அனைத்து பெயர்களும் இருக்கும். ஆனால் அந்த தேர்தலில் இந்த இரண்டு போஸ்டர்களில் மிகச் சிறிய அளவில் சிவகாசியில் இரவு பகலாக அடிக்கப்பட்டு (அப்போது பிளக்ஸ் பேனர்கள் கிடையாது) தமிழகத்தில் ஒவ்வொரு தெருவிலும் இருக்க வேண்டும் என்று கலைஞர் படு தந்திரமாக தேர்தல் பணி செய்தார். அந்த தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற ஒட்டுகள் சுமார் 50.3%. திமுகவின் வரலாற்றிலேயே இவ்வளவு ஒட்டுகளை அதற்கு முன்னும் பின்னும் வாங்கியதில்லை. இப்போது ஆர்.கே.நகர் இடைதேர்தலில் திமுக டெபாசிட்டே காலியானது என்பதும் நாளைய வரலாறு. 🤘

  • Robins - Chennai

   In the next election, Rajini gave his voice against Jaya. But, Jaya won the election with clean majority. Rajini would have realized his real strenght that time. He is powerless. If I tell that in his own words... "Maya Maya ellam Maya..."

 • rdkumar -

  இலங்கை அரசை கண்டித்து தமிழர்களுக்காக நின்ற முதல் நடிகன் நீ..(1984) கர்நாடக அரசை கண்டித்து தமிழர்களுக்காக நின்ற முதல் நடிகனும் நீ(1991)..! கண் தானம் செய்ய கையெழுத்திட்ட முதல் தமிழ் நடிகன் நீ.. 20 ஆண்டுகள் முன்பே தமிழக வெள்ளத்திற்க்கு 10லட்சம் மேல் கொடுத்த ஒரே நடிகன் நீ மட்டும் தான்(1996) வெள்ள அபாயத்தை உணர்ந்து விளம்பரமின்றி தமிழகத்துக்கு 10லட்சம் எடுத்துக் கொடுத்த முதல் நடிகனும் நீ (2015)..! ரசிகர் மன்றங்களை எல்லாம் நற்பணி மன்றங்களாக மாற்றிய நடிகன் நீ(1992) இனி புதிய ரசிகர் மன்றங்கள் வேண்டாமென 10வருடங்களாக நிற்க்கும் ஒரே நடிகனும் நீ..! சுனாமி வந்தபோது அதிகமாக 21லட்சம் தமிழகத்திற்க்கு கொடுத்த ஒரே நடிகனும் நீ தான்(2004) கோவை குண்டுவெடிப்புக்கு தேடிச் சென்று நிதியுதவி அளித்த ஒரே நடிகன் நீ மட்டும் தான்(1995)..! தமிழகத்தின் பழமைவாய்ந்த கோவிலான அண்ணமாலையார் கோவில் கிரிவலப்பாதைக்கு 10லட்சம் செலவில் மின்விளக்குகள் கொடுத்தது நீ தான்(1997) தமிழகத்தில் ஒரு முதல்வரை உருவாக்கி ஓரமாய் நின்றுவிட்ட ஒரே தலைவனும் நீ தான்(1996)..! என் வாழ்க்கைக்கு பிறகு என் திருமண மண்டபத்தில் இருந்து வரும் ஒரு பைசா கூட என் மனைவி பிள்ளைகளுக்கு போய்ச் சேராது என எழுதி கொடுத்த ஒரே நடிகன் நீ தான்(1999) வாழும் போதே ஏழை மக்கள் தங்க உன் மண்டபத்தை அவ்வப்போது விட்டுக் கொடுக்கும் ஒரே நடிகன் நீ மட்டும் தான்..! சொந்த செலவில் தமிழ் மக்களுக்கு சீர்வரிசை கொடுத்து திருமணங்களை நடத்தி வைக்க ஆரம்பித்த முதல் நடிகன் நீ தான்(1997) சொந்த செலவிற்க்காக விளம்பர படங்கள் நடிக்காத இன்றைய ஒரே நடிகன் நீ மட்டும் தான்..! 1000 பேர் முன்னிலையில் உழைத்த சொத்துக்களை தமிழ் மக்களுக்கு உயில் கொடுத்த ஒரே நடிகன் நீ தான்(1999) 1000 கோடி உலக மக்கள் பார்க்க தமிழ் கலையை உலகின் விழிகளுக்கு உயர்த்திய முதல் நடிகன் நீ தான்..! தமிழர்கள் வாழ்வுக்காக எல்லாக் காலமும் சிந்தித்து வந்த தலைவனே -நீ தமிழர்க்கு என்ன செய்தாய் என்ற ஒரே வார்த்தையில் உன்னை நோகடிப்பதும் தமிழனே..!

 • rdkumar -

  தமிழுக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் ரஜினி என்ன செய்தார்? ஈழ பிரச்சனைக்கு 1988 இருந்தே குரல் கொடுத்தவர். பல சந்தர்ப்பங்களில் காவேரி பிரச்னையில் குரல் கொடுத்தவர். நதி நீர் இணைப்பிற்கு முதலில் ஆதரித்தவர். கோவை குண்டு வெடிப்பை எதிர்த்து குரல் கொடுத்தவர்.பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பண உதவி செய்தவர். 1996 கார்கில் போர், 1998 வெள்ளம், 2004 சுனாமி, 2005 வெள்ளம், 2008 ஈழ பிரச்னை, 2015 வெள்ளம் போன்ற பல இயற்க்கை சீற்றங்கள் பாதிப்புகளுக்கு பல லட்சம் உதவியவர். பல ஆயிரம் திருமணங்களை வருடந்தோறும் நடத்தி வருபவர். பல ஏழை மாணவர்களின் படிப்பு செலவை ஏற்றவர். விளம்பரங்களில் நடித்து கோடிகளை சம்பாகித்தவர். தமிழ் சினிமாவை உலகெங்கும் கொண்டு சென்றவர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இவர் குரல் கொடுத்தது சிலருக்கு மட்டும்கேட்கவில்லை. 1988 ஆம் ஆண்டிலேயே ஜானகி கட்சியை தான் தன ரசிகர்கள் ஆதரிக்க வேண்டுமென்று தைரியமாக கட்டளை இட்டவர். 1996 ஆம் ஆண்டு,அனைவரும் தவம் இருக்கும் பதவி நாற்காலியை நிராகரித்தவர். இவரால் திரையுலகில் பல்லாயிரம் பயனடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் தான். பல ஆண்டுகளாக ஊழல்களால் திளைத்த தமிழ்நாடு, இன்று இவரால் உலகெங்கும் பேசப்படுகிறது. அனால் இவர் மட்டும் தமிழர் இல்லை. வாழ்க இவர்களின் தமிழ் பற்று..!

 • Endless - Chennai,இந்தியா

  Slow and Steady, will Win the Race.....

 • teeran - new jersey,யூ.எஸ்.ஏ

  மூடர் கூடம்

 • R S GOPHALA - Chennai,இந்தியா

  கலக்குங்க தலைவா நாங்க இருக்கம் ஒங்க கூட... கடைசி வரையிலும் தோள் கொடுப்போம். உன்னுடையது மற்றவர்களை போல சந்தர்ப்பவாத அரசியல் இல்லை. நீ உண்மையிலேயே மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து இறங்கி இருக்கிறாய். கமல் போன்றவர்கள் அடுத்த ரவுண்டு சம்பாதிக்க களம் தேடி கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒரு நாள் மறைந்து போவார்கள்... உன் நல்ல எண்ணங்களுக்கு எங்கள், உன் உண்மையான ரசிகனாகிய எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.

 • kowsik Rishi - Chennai,இந்தியா

  நான் சொல்லுகிறேன் சிவாஜி ராவ் கைவார்ட எந்த கட்ட நடவடிக்கைக்கும் நகரமாட்டார் இவர் தன் அடுத்த சினிமா படத்திற்கு விளம்பரம் செய்து கொள்கிறார் அவ்வளவுதான் - எம்.ஜி.ஆர். செல்வி ஜெ ஜெ நிழலுக்கு கூட இவர் கிட்ட வரமுடியாது - தமிழ் மக்களை ஏமாற்றும் உச்சக்கட்ட பேர்வழி இவர் - இவர் சினிமாவில் கருப்பு வெள்ளை விளையாட்டை இங்கே அரசியல் களத்தில் செய்யமுடியுமா என்று பார்க்கிறார் முடியாது கண்ணா தமிழ் மக்கள் சிவாஜிக்கு செய்தார்களே அது தான் உனக்கும் நடக்கும் - தமிழ் மக்களே இப்படி ஒரு தலைவர் வேண்டுமா ? என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் , எப்படி செய்யவேண்டும் என்றே தெரியாமல் மிரளும் இவர் என்ன தலைவர் தமிழ் நாடு மக்களே தமிழ் மக்களே - சிவாஜி ராவ் கைகுவார்ட ( பாலச்சந்தர் போட்ட பிட்சை பெயர் - ரஜினிகாந்த் ) இவருக்கு ஒரே ஒரு கவலை பணம், துட்டு, கரன்சி, சினிமாவில் போட்டால் எடுக்கலாம் இங்கே அது பதவியில் வந்தால் இல்லை என்றால் தலையில் துண்டு தான் அது தான் இவருக்கு உள்ள ஒரே கவலை மக்களே இவரை சுற்றி நீங்கள் பார்க்கும் கூட்டம் அயோ பாவம் இவரை வைத்து இயங்கும் இவரை இயக்கம் கூட்டம் அய்யயோ சொல்லவே பயமா இருக்கு தமிழ் மக்களே உஷார் மு.கருணாநிதியின் அடுத்த அவதாரம் தான் இந்த சிவாஜி ராவ் கைவார்ட புரிந்து கொண்டால் சார் செவி உள்ளவன் கேட்கட்டும் என்று அன்று ஒரு மக ஞானி சொன்னார் - இனி உங்கள் பாடு தமிழ் மக்களே

 • Nadusalai - Washington DC,யூ.எஸ்.ஏ

  எதிர்பார்க்கப்படுகிறது. சந்திக்கிறார். அவர் நகர்கிறாரோ இல்லையோ, நகர்த்துறீர்கள்.

 • Sandru - Chennai,இந்தியா

  உண்மைதான் . தன் அடுத்த பட வசூலை மேம்படுத்த இந்த சந்திப்பை நடத்த இருக்கிறார். " உண்டு கொழுத்த நண்டு வலையில் தங்காது"

 • Nerpaarvai Natarajan - Chennai ,இந்தியா

  An incredibly honest man This man is the need of the hour for TN. Let's wait and see what plans he has for us

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  அறுவதுகளை கடந்துவிட்டு எழுவது நோக்கி என்டர் ஆகிறார் அவ்வளவுதான்.

 • Nerpaarvai Natarajan - Chennai ,இந்தியா

  இருவரும் ( ரஜினியும் கமலும்) வருவது நன்றே.. இப்பொழுது இருக்கும் அரசியல் தலைவர்களைவிட இவர்களின் நேர்மை , நம்பகத்தன்மை உயர்வானதே பொறுத்திருந்துப் பார்ப்போம் , இவர்களின் கொள்கைத் தெளிவை. இப்பொழுதைய அரசியலில் மலிந்திருக்கும் ஊழல் ( இமாலய ஊழல்கள்), குடும்ப அரசியல், சாதி அரசியல், மத அரசியல்,பிரிவினைவாத அரசியல், தீவிரவாத அரசியல் போன்ற சாக்கடைகளைத் தாண்டி உங்கள் இருவரது கொள்கைகள் அமையுமானால் மக்கள் உங்கள் இருவரது பக்கமே நிற்பர். உயரங்களை அடைவீர்கள் வாழ்த்துக்கள்

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  This man is not going to start any political party in our state now as he is only discussing with his visil aduchan kunjugal still and there will be no for his discussion.Only the medias are giving their imaginary follow up like this with attractive head line for such news for their commercial gain.Mr.Kamalahasan may superced him by starting his political party before him.Let them come or not come to the politics who care and worry for them.

  • rdkumar - ,

   we worry only for legendary dmk or great admk or stunning only tamilian in the world Seeman

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  அடுத்த கட்ட நகர்வு....காலா வெளியிடும் தேதி முடிவாகிவிட்டது....அடுத்து 2 .O அவ்வளவுதான்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement