Advertisement

பிரபலங்களையும் ரசிக்க வைக்கும் பிரியா வாரியர்

'பிரேமம்' படத்தில் தமிழ் பேசும் டீச்சராக வந்த மலர் டீச்சர், கடந்த வருடம் ஜிமிக்கி கம்மல் பாடலால் புகழ் பெற்ற ஷெர்லி, வரிசையில் இப்போது பிரியா வாரியர் இணைந்துவிட்டார். இந்திய அளவில் உள்ள ஊடகங்கள் அனைத்துமே 'ஒரு அடார் லவ்' படத்தில் இடம் பெறும் 'மாணிக்ய மலராய பூவி' பாடலையும், அந்தப் பாடலில் புருவத்தை அசைத்து அசைத்து அசர வைத்த பிரியா வாரியர் பற்றியும் பாராட்டித் தள்ளி வருகின்றன.

இந்தப் பாடல் சமூக வலைத்தளங்களில் திடீரென வைரலாகி அந்தப் பாடலில் நடித்த பிரியா வாரியர், இந்திய அளவில் டிரென்டிங்கில் வந்துவிட்டார். அது மட்டுமல்ல சில நாட்களுக்கு முன்பு வரை அவருடைய டுவிட்டர் கணக்கில் வெறும் 5000 பாலோயர்கள் மட்டுமே இருந்தார்கள். இப்போது அந்த எண்ணிக்கை 50000ஐத் தாண்டிவிட்டது. அந்த அளவிற்கு பிரியா வாரியர் பலரையும் கவர்ந்துவிட்டார்.

பிரியா வாரியரின் பார்வையிலும் சில பிரபலங்கள் விழுந்துவிட்டார்கள். கேரளாவில் பெரும் வரவேற்பைப் பெற்ற தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் அந்த பாடல் பற்றி டுவிட்டரில் கருத்து சொல்லி இன்னும் வைரல் ஆக்கிவிட்டார். “சமீப காலத்தில் நான் பார்த்த அழகான வீடியோ. எளிமையின் மகத்துவம், ரசிக்கிறேன்,” என அல்லு அர்ஜுன் கூறியுள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement