Advertisement

பத்மாவத்துடன் பத்மன் மோதலா? சோனம் மறுப்பு

சமீப காலமாக நடிகை சோனம் கபூர், பத்மன் படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிசியாக இருந்து வருகிறார். சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றிற்கு வந்திருந்த சோனம் கபூரிடம், பத்மன் படம் பத்மாவத் படத்துடன் மோதுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சோனம் கபூர், என்னை பொறுத்தவரை, பத்மாவத் படம் வரும் ஜனவரி 25ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளரோ, செய்தி குறிப்பிலோ அல்லது சஞ்சய் லீலா பன்சாலியோ அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அப்படத்தின் ரிலீஸ் குறித்து வெளியிடப்படவில்லை. அதனால் அதனை பற்றிய எந்த விமர்சனங்களை பற்றியும் நான் சிந்திப்பதில்லை என்றார்.

அக்ஷய் குமார், சோனம் கபூர் நடித்துள்ள பத்மன் படம் ஜனவரி 25ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதே நாளில் பத்மாவத் படமும் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாக பாலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement