Advertisement

சாஹோவைத் தொடர்ந்து காதல் கதையில் பிரபாஸ்

பாகுபலி-2 படத்தை அடுத்து சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். பாகுபலியில் நடித்த சரித்திர கெட்டப்பில் இருந்து தன்னை முழுமையாக மாற்றி ஸ்டைலிசான தோற்றத்தில் நடித்து வரும் பிரபாசுடன் ஸ்ரத்தா கபூர் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடர்ந்து நடக்கிறது. இதையடுத்து சில வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்புக்கிடையே பிரபாஸ் அடுத்தபடியாக நடிக்கும் புதிய படத்தின் பிரீ-புரொடக்சன்ஸ் வேலைகளும் தற்போது தொடங்கியிருக்கிறது. கோபிசந்த்- ராசிகண்ணா நடித்த ஜில் என்ற படத்தை இயக்கிய ராதா கிருஷ்ண குமார் பிரபாஸின் புதிய படத்தை இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த படமும் ஜில் படத்தைப் போலவே காதல் கதையில் உருவாகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement