Advertisement

பிப்ரவரியில் சைரா நரசிம்மரெட்டி இரண்டாம்கட்ட படப்பிடிப்பு!

சிரஞ்சீவி நடித்து வரும் 151வது படம் சைரா நரசிம்ம ரெட்டி. சுதந்திர போராட்ட காலத்து கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் சுதந்திர போராட்ட தியாகியாக நடிப்பதால், பெரிய அளவில் மீசை, தாடி வைத்து நடிக்கிறார் சிரஞ்சீவி. அதோடு இந்த படத்தில் இங்கிலாந்து நாட்டு நடிகர்களும் நடிப்பதோடு, பாடல் காட்சிகளிலும் இடம்பெறுகிறார்கள். அதனால் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றபோது நூற்றுக்கணக்கான இங்கிலாந்து நாட்டு கலைஞர்கள் இந்த படத்தில் நடித்தனர்.

அந்த வகையில், டிசம்பர் மாதம் 10நாட்கள் படப்பிடிப்பு நடத்தியவர்கள், இரண்டாம்கட்ட படப்பிடிப்பை பிப்ரவரியில் தொடங்குகிறார்கள். அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு இடைவெளி அதிகமாக இருந்ததால் தனது தாடி, மீசை இன்னும் பெரிய அளவில் வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக தாடியை எடுத்திருந்த சிரஞ்சீவி, தற்போது மீண்டு தாடி, மீசை வளர்த்து வருகிறார். பிப்ரவரி மாதம் நடைபெறும் படப்பிடிப்பில் நயன்தாரா, விஜயசேதுபதி, சுதீப் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement