Advertisement

கடந்த கால நிகழ்வுகளின் பதிவு!

பாலிவுட்டில் பிரபல இயக்குனராக வெற்றிக்கொடி நாட்டிய பிரபு தேவாவுக்கு, கடைசியாக சில படங்கள், சொதப்பின. இதனால், இயக்குனர் பொறுப்பை மூட்டை கட்டி வைத்து விட்டு, முழுவீச்சில் மீண்டும் நடிகராக அரிதாரம் பூசத் தயாராகி
விட்டார். தேவி படத்துக்கு பின், தமிழில் தொடர்ச்சியாக, யங் மங் சங், மெர்குரி, குலேபகாவலி என ஓய்வில்லாமல் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே, சில ஆண்டுகளுக்கு முன், அவர் நடித்து, தங்கர் பச்சான் இயக்கிய களவாடிய
பொழுதுகள் படம், திரைக்கு வர தயாராகியுள்ளது. இதில், பிரபு தேவாவுக்கு ஜோடியாக, பூமிகா நடித்துள்ளார். கடந்த கால நிகழ்வுகளை உணர்ச்சி மேலிட விவரிப்பதில், கில்லாடியான தங்கர்,
இந்த படத்துக்கும் அதே யுக்தியை தான் கையாண்டு உள்ளாராம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement