Advertisement

நாங்களும் அழகாகத் தானே இருக்கோம்!

'நானும் அழகாகத் தானே இருக்கிறேன்; எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது' என, புலம்புகிறாராம், பிரணிதா. சகுனி, ஜெமினி கணேசனும், சுருளி ராஜனும் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், அவ்வப்போது, தெலுங்கு படங்களிலும் தலைகாட்டி வருகிறார். ஆனால், கன்னட திரையுலகிலிருந்து தான், இவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வருகின்றன. தமிழ், தெலுங்கு திரையுலகம், தன் மீது ஓரவஞ்சனை காட்டுவதாக நினைக்கிறார், பிரணிதா. இப்போது, மாஸ் லீடர் என்ற கன்னட படத்திலும், ஒரு மலையாள படத்திலும் மட்டுமே நடித்து வருகிறார். தமிழில் சுத்தமாக வாய்ப்பில்லை. 'எனக்கான காலம் வராமலா போய் விடும்' என்கிறார், பிரணிதா.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement