Advertisement

ஒரு ஹீரோ; மூன்று ஹீரோயின்கள்!

மகேஷ் பாபு நடித்த தெலுங்கு படங்கள், தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும்போது, ஓரளவு வசூலை
குவிக்கும். அதிலும், சென்னை போன்ற நகரங்களில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் அதிகமாக வசிப்பதால், இங்கு மகேஷ் பாபு படங்களுக்கு கிராக்கி நிலவும். சமீபத்தில் வெளியான
ஸ்பைடர் படமும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த வரிசையில், தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற,
பிரம்மோற்சவம் படம், அடுத்ததாக தமிழ் பேச வருகிறது. இதில், மகேஷ் பாபுக்கு ஜோடியாக, காஜல்
அகர்வால், சமந்தா, பிரணிதா என, மூன்று
ஹீரோயின்கள். இப்போதெல்லாம், தெலுங்கு ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக, அங்கு வெளியாகும் பெரும்பாலான படங்களில், ஒன்றுக்கும் மேற்பட்ட ஹீரோயின்களை நடிக்க வைப்பது வழக்கமாக உள்ளது. அதுவும், மகேஷ் பாபு போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கும் படம் என்றால், கேட்க வேண்டுமா; ஒரே இளமை மயம் தான்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement