Advertisement

ஹலோ - திருமண பாடல் வெளியீடு

விக்ரம் குமார் இயக்கத்தில் நாகார்ஜூனாவின் இளைய மகன் அகில் நடித்துள்ள ரொமான்டிக் படம் ஹலோ. இந்த படத்தில் அகிலுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். டிசம்பர் 22-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் இசை வெளியீடு டிசம்பர் 10-ந்தேதி நடைபெற உள்ளது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியான நிலையில், நேற்று ஹலோ படத்தில் இடம்பெற்றுள்ள மேரிஸ் மேரிஸ் என்ற திருமண சூழலுக்கான பாடல் ஒன்று வீடியோ வடிவில் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த பாடலில் அகில் - கல்யாணி பிரியதர்ஷன் ஆகிய இருவரும் நடனமாடியுள்ளனர். இந்த படத்திற்கு அனூப் ரூபன்ஸ் இசையமைத்துள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement