Advertisement

கேளிக்கை வரி 2 சதவீதம் குறைப்பு : இனி 8 சதவீதம்

தியேட்டர் டிக்கெட் கட்டணங்கள் மீதான கேளிக்கை வரி விதிப்பு 10 சதவீதம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதற்கு திரையுலகத்தைச் சார்ந்த சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து இரண்டு வாரங்களாக படங்கள் எதுவும் வெளியாகமல் இருந்தன.

கேளிக்கை வரியை குறைப்பது தொடர்பாக சில தினங்களாக அரசுடன் தமிழ்த் திரையுலகச் சங்கங்கள் பேச்சு வார்த்தை நடத்தி வந்தன. அதில் 2 சதவீதம் கேளிக்கை வரியை குறைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இனி தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து 28 சதவீதம் ஜிஎஸ்டியும், 8 சதவீதம் கேளிக்கை வரியும் வசூலிக்கப்படும்.

அரசுடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால், அரசு விதித்த டிக்கெட் கட்டணத்தை விட ஒரு ரூபாய் கூட தியேட்டர் உரிமையாளர்கள் விற்க கூடாது. தின்பண்டங்களின் விலையில் எம்ஆர்பியில் என்ன விலை போடப்பட்டுள்ளதோ அந்த விலைக்கே விற்க வேண்டும். மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கேளிக்கை வரியை 2 சதவீதம் குறைத்த தமிழக அரசுக்கு நன்றி என்றார்.

தற்போதைய நிலவரப்படி, சென்னையில் அதிகபட்சமாக மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இனி ரூ.190 டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும், ஆன்லைன் என்றால் மேலும் ரூ.30 அதிகரிக்கும். மற்ற ஊர்கள் மற்றும் தியேட்டர்களுக்கு ஏற்ப இந்த கட்டணத்தில் மாற்றம் இருக்கும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (11)

 • சூரிய புத்திரன் - Mannai,இந்தியா

  தமிழ் ராக்கர்ஸ் வாழ்க.......

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நாய்க்கு பிஸ்கேட் துண்டா...?

 • LAX - Trichy,இந்தியா

  டேய்.. விசாலு, அடுத்தவங்க வருமானத்தைப் பற்றி மட்டுமே ஓவரா ரூல்ஸ் பேசுறியே.. உன்னைப்போன்ற உனக்கு மேலே உள்ள நடிகர்களின் சம்பள வரையரைகளை பற்றியும் கொஞ்சம் உளரேன்டா..

 • LAX - Trichy,இந்தியா

  சினிமாக்காரர்கள் (குறிப்பாக நடிகர்கள்) சம்பளம் காசோலைகளாக மட்டுமே வழங்கப்பட வேண்டும்.. அதுவும் தகுந்த வருமானவரி (TDS) பிடித்தம் செய்யப்பட பின்பே வழங்கப்பட வேண்டும்..

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகை, நடிகர்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள மாட்டார்கள். 300 கோடிகளில் படம் எடுப்பவர்கள் கேளிக்கை வரி செலுத்த முடியவில்லை. உலக மக்களின் பசியினை போக்கும் விவசாயி வாங்கும் விவசாய பொருட்களுக்கும், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் உபயோகப்படுத்தும் அத்தியாவசிய பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி என்று அரசுகள் (மத்திய, மாநில) மக்களை கொலையாய் கொல்கிறது. கையாலாகாத அரசுகள் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி குறைப்பு செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.

 • POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ

  ஒட்டகம் நடப்பதற்கு வெறும் சாக்கு போட்ட கதைதான் .

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  ஒருவரும் திரையரங்கம் போகக்கூடாது....

 • venkataramanan bv - chennai,இந்தியா

  ரோகினி தியேட்டர்சில் மெர்சலுக்கு 19.10.17 அன்று ஒரு டிக்கெட் விலை - ரூ -240.40. base charge =Rs.150.00, cgst-Rs.21, sgst-21, TMC-Rs.1, Gst for TMC-Rs.12, Internet handling fees-Rs-35.40. இப்படி இருந்தால் நாலு பேருக்கு Rs-961.60, parking 30.00, snacks 400.00, Total- Approx Rs.1400- 1500.00, Rohini cannot be said a full multiplex, not like Phoenix, PVR etc? if it is a good picture ok. But all is it so?. what about bairava? actor vishal says that snacks should be sold at MRP. But for cutlet, french fries, nuggets, puffs, popcorn(theatre preparation), Rose Milk, cake coffee , tea etc, no brand . theatre sell their own. where does MRP arise?. Here after they will try to sell non branded items. Will a middle class family will affordable? Govt & film personalities should try for better solution

 • Bala Subramani - Pittsburgh,யூ.எஸ்.ஏ

  மெர்சல் ரிலீஸ் ஆகும் பொது தெரியும் டிக்கெட் விலை என்ன என்று?.

 • Nagarajan D - Coimbatore,இந்தியா

  டேய் சினிமா காரா போடா இனிமே எல்லாம் தமிழ் ராக்கர்ஸ் தான்

 • MohanaSundaram - Erode,இந்தியா

  2 சதவீதம் குறைப்பு என்பது ரூபாய் 3 - அல்லது - 4 தான் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement