Advertisement

90 வயது வரை நடிக்க முடிவு

பிரபல பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்டின் மகள், அலியா பட். இவர் நடிக்க வந்து, 15 ஆண்டுகளானாலும், 12 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். கதைகளை தேர்வு செய்து நடிப்பதில், இவர் வல்லவர். அலியா நடித்த பல படங்கள், விருதுகளை பெற்றுள்ளன; இவரும், பல விருதுகளைபெற்றுள்ளார்.

''ஆண்களுக்காக மட்டும், முதிர் வயது வரை, கதைகள் தயார் செய்கின்றனர். ஆனால், பெண்களுக்கு அப்படி இல்லை; இளம் வயது என்றால், ஹீரோயினாக நடிக்க வேண்டும்; அதற்கு பின், ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும். மற்ற எந்தவிதமான வித்தியாச மான முயற்சியையும், நம் இயக்குனர்கள் மேற்கொள்வது இல்லை. இதனால், நடிகையர், ஒரு சில ஆண்டுகளிலேயே, திரைத்துறையை விட்டு விலக வேண்டியுள்ளது. எனக்கு மட்டும் சரியான வாய்ப்பு கிடைத்தால், 90 வயது வரை நடிப்பேன்,'' என்றார் அலியா.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

    மாக்கெட்டு இருக்குமாம்மா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement