Advertisement

வித்தியாசமான முயற்சி!

இப்போதெல்லாம், படம் எடுக்கும் போதே, அதை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்க, எப்படி வித்தியாசமாக விளம்பரப்படுத்தலாம் என, வித விதமாக யோசிக்கின்றனர், கோலிவுட்டின் இயக்குனர்கள். இந்த வகையில், வேகமாக தயாராகி வரும் விதிமதி உல்டா என்ற படத்தின் ஒரு பாடலை, நடிகர் சிவகார்த்திகேயன், தன் டுவிட்டர் பக்கத்தில், சில நிமிடங்கள் ஓடும் சிங்கிள் டிராக்காக வெளியிட்டார்.

சமீபத்தில், இந்த படத்தின் டிரெய்லரை, இயக்குனர் ரஞ்சித் வெளியிட்டார். விதிமதி உல்டாவில் ரமீஸ் ராஜா கதாநாயகனாகவும், ஜனனி அய்யர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

'இப்படிப்பட்ட வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே, ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைக்க முடியும்' என்றது, படக்குழு.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement