Advertisement

மற்றுமொரு மலையாள வரவு!

மாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு படையெடுத்து வரும் நடிகையரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில், லேட்டஸ்ட் வரவு, நமிதா பிரமோத். கேரளாவின் பிரபல சுற்றுலா தலமான, குமரகோம் தான், மேடத்துக்கு சொந்த ஊர். டிராபிக், விக்ரமாதித்யன், சந்திரேட்டன் எவிடே போன்ற, 'ஹிட்' படங்களில் நடித்திருந்தாலும், தமிழுக்கு சற்று தாமதமாகத் தான் அடி எடுத்து வைத்துள்ளார்.

ப்ரியதர்ஷன் இயக்கத்தில், உதயநிதிக்கு ஜோடியாக, நிமிர் படத்தில் நடிக்கிறார், நமிதா. இவர் விஷயத்தில், கோலிவுட்டை விட, டோலிவுட் முந்திவிட்டது என்று தான் கூற வேண்டும். ஏற்கனவே சில தெலுங்கு படங்களில் நடித்து, அங்கு பிரபலமாகி விட்டார். 'தமிழ் சினிமா ரசிகர்கள், கேரளாவிலிருந்து வந்த எல்லா நடிகையருக்கும் வாழ்வு கொடுத்துள்ளனர். நமிதாவை மட்டும் கைவிட்டு விடுவரா என்ன...' என்கிறது, கோலிவுட் வட்டாரங்கள்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement