Advertisement

மயக்குவாரா சாயிஷா?

வனமகன் படம் வெளியான போது, கோலிவுட்டின் ஒட்டுமொத்த ஹீரோக்களின் பார்வையும், அந்த படத்தின் ஹீரோயின் சாயிஷா சேகல் மீது தான் இருந்தது. அதிலும், அவரது நடன அசைவுகளுக்கு, முன்னணி ஹீரோக்கள் கூட, ரசிகர்களாகி விட்டனர். ஆனால், வனமகனின் தோல்வியால், யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை.

தற்போது, விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும், ஜூங்கா என்ற படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். காமெடி மற்றும் மாயாஜாலத்தை மையமாக வைத்து தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு, வேகமாக நடக்கிறது. இதை தவிர, கறுப்பு ராஜா வெள்ளை ராஜா படத்திலும், சாயிஷா நடிக்கிறார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement