Advertisement

இருமொழி நடிகையாகும் சாய் தன்சிகா

கபாலி படத்தில் ரஜினியின் மகளாக நடித்த தன்சிகா, அதன்பிறகு தனது பெயருக்கு முன்னாள் சாய் என்பதை இணைத்து சாய் தன்ஷிகா ஆனார். கபாலி படத்தில் கிடைத்த புகழ் காரணமாக தமிழ், மட்டுமின்றி மலையாளம், தெலுங்கிலும் அவர் பிசியாகி வருகிறார். அந்த வகையில், தமிழ், மலையாளத்தில் தயாராகியுள்ள சோலோ படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்துள்ளார்.

தெலுங்கில் வாலுஜடா படத்தைத் தொடர்ந்து இப்போது மேலா என்றொரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார் சாய் தன்ஷிகா. சூர்யா தேஜா நாயகனாக நடிக்கும் இந்த முழுநீள காமெடி படத்தில் சாய் தன்ஷிகா தான் லீடு ரோலில் நடிக்கிறாராம். இந்த படம் தமிழிலும் வெளியாக உள்ளதாம். ஆக, இதுவரை நேரடி தமிழ்ப்படங்களில் மட்டுமே நடித்து வந்த சாய் தன்ஷிகா, தற்போது இரண்டு மொழிகளில் தயாராகும் படங்களில் நடிக்கத் தொடங்கி விட்டார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement