Advertisement

மா.கா.பா.வுக்கு விஷால் கொடுத்த உற்சாகம்

சந்தானம், சிவகார்த்திகேயன், வரிசையில் விஜய் டிவியிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் மா.கா.பா. ஆனந்த். நாளைய இயக்குனர் சீஸன் 5-ன் வெற்றியாளர் மார்டின் இயக்கத்தில் மா.கா.பா. ஆனந்த் நடித்திருக்கும் படம் 'மாணிக்'.

மா.கா.பா.ஆனந்துக்கு ஜோடியாக சூசா குமார் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில், இரண்டாவது கதாநாயகனாக வத்சன் நடித்திருக்கிறார். மோகிதா சினி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் எம்.சுப்பிரமணியன் தயாரிக்கும் இந்த படத்திற்கு தரண் குமார் இசை அமைக்கிறார். எம்.கே.பழனிகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் போஸ்ட்புரடக்ஷ்ன் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது 'மாணிக்' படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். மாணிக் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட வேண்டும் என்று விஷாலிடம் கேட்டதும், மா.பா.கா. ஆனந்த் மற்றும் படக்குழுவினருக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக அத்தனை பிசியிலும் சம்மதம் தெரிவித்துள்ளார். மாணிக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வருகிற 15-ஆம் தேதி விஷால் வெளியிடுகிறார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement