Advertisement

புரூஸ்லீ படத்திற்கு இசையமைக்கும் ஏஆர் ரஹ்மான்

தமிழ் உள்ளிட்ட இந்திய படங்களையும் தாண்டி ஹாலிவுட் வரை சென்று சாதித்து ஆஸ்கர் விருது வென்றவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். தொடர்ந்து இந்திய படங்கள் மட்டுமல்லாது ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இவர், புரூஸ்லீயின் வாழ்க்கை படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

பிரபல இயக்குநர் சேகர் கபூர், மறைந்த நடிகர் புரூஸ்லீயின் வாழ்க்கையை மையமாக வைத்து "லிட்டில் டிராகன்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில், படத்திற்கு ரஹ்மான் இசையக்க உள்ளார். இத்தகவலை ஒரு பேட்டியின் போது சேகர் கபூர் தெரிவித்திருக்கிறார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement