Advertisement

சஞ்சய் தத் மாதிரி ஒருவரை பார்த்தது இல்லை : விது வினோத் சோப்ரா

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா. தற்போது இவர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தை தயாரித்திருக்கிறார். சமீபத்தில் இவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய விது வினோத், சஞ்சய் தத் மாதிரி ஒரு நடிகரை நான் பார்த்தது இல்லை என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், மனிதர்களில் மிகவும் தனித்துவமானவர் சஞ்சய். அவரை எனக்கு நீண்டகாலமாகவே தெரியும். ஆனால் அவரைப்பற்றி ராஜ்குமார் ஹிரானி சொன்னபோது இன்னும் பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். யாராலும் சஞ்சய்யை எளிதில் புரிந்து கொள்ள முடியாது. இந்த சினிமா துறையில் 30-40 ஆண்டுகளாக உள்ளேன். அவரை மாதிரியான ஒரு மனிதரை நான் இதுவரை பார்த்தது கிடையாது, அவரை போன்று ஒருவரும் கிடையாது என்று கூறியுள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement