Advertisement

விடுமுறை நாளிலும் தியேட்டர்களுக்கு வராத மக்கள்

ஜிஎஸ்டி வரி விதிப்பால் தியேட்டர்களில் டிக்கெட் விலை உயர்ந்து பத்து நாட்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், மக்கள் தியேட்டர் விலை உயர்வை பெரிதாகவே எடுத்துக் கொண்டுள்ளார்கள் எனத் தெரிகிறது. கடந்த இரண்டு வாரங்களாகவே விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தியேட்டர்களுக்கு மக்கள் வருவது வெகுவாக் குறைந்துவிட்டதாக தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

பொதுவாக, புதிய படங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பல காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக இருக்கும். ஆனால், இரண்டு வாரங்களாக ஓரிரு தியேட்டர்களில் ஒரு சில காட்சிகள் மட்டுமே அரங்கு நிறைந்துள்ளன. மற்ற தியேட்டர்களில் 50 சதவீதத்திற்கும் குறைவான மக்களே வந்துள்ளதாகச் சொல்கிறார்கள். மல்டிபிளக்ஸ்களில் தான் இப்படி என்றால் வெளியூர்களில் நிலைமை இன்னும் மோசமாம். வெள்ளிக் கிழமை வெளிவந்த புதுப் படங்களைப் பார்க்க பல தியேட்டர்களில் 10 பேர் கூட வரவில்லையாம்.

இன்னும் கேளிக்கை வரி விவகாரம் பேச்சு வார்த்தை அளவில் தான் உள்ளது. அது வருமா, வராதா என்பது பேச்சு வார்த்தை முடிந்த பின்னர்தான் தெரியும். தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக சென்னையில் உள்ள அபிராமி தியேட்டர் இணையதள முன்பதிவுக் கட்டணத்தை ரத்து செய்துவிட்டது. அதன் மூலம் இனி 30 ரூபாய் மிச்சமாகும். இது போல மற்ற தியேட்டர்களும் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை விட பார்க்கிங் கட்டணம், தின்பண்டங்கள் விலை குறைக்கப்பட வேண்டும் என்பது அவர்களது முக்கி டார்கெட் ஆக உள்ளது.

நிலைமை இப்படியே போனால் தமிழ்நாட்டில் இந்த வருடம் பல தியேட்டர்கள் மூடப்படும் அபாயம் ஏற்படும் என்கிறார்கள்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (77)

 • ravichandran - Hosur,இந்தியா

  இது GSTயால் ஏற்பட்ட பாதிப்பு இல்லை இவர்களின் பேராசையால் வந்த பாதிப்பு, பேராசை பெருநஷ்டம்

 • shankar - chennai,இந்தியா

  After rajini Vijay is the last super star idhoda cinema close andre K balachandar sonaru

 • mupaco - Madurai,இந்தியா

  முத்து படம் 30 ரூபாய் தான். எப்படி ஓடுச்சு? அப்புறம் தியேட்டர் தொழிலாளி அப்ப வாங்குன சம்பளத்துல இப்ப எவ்வளவு கூட இருக்கு? கட்டணத்தை கூட்டறதுக்கு? ரசனை அப்படி சொல்லி நடிகரை, இயக்குனரை தூக்கி விட்டு நம்மளையும் செலவழிக்க வைத்தால் என்ன செய்வது?

 • Arumugam - Paris,பிரான்ஸ்

  கூத்தாடிகள் ஒரு சிலர் கோடி கணக்கில் சம்பாதிப்பதும், பலர் வறுமையில் வாடுவதுமான இந்த சினிமாத்தொழிலை முழுவதுமாக மூடிவிட்டால், சமூகம் உருப்படும். இவர்களும் வேறு வேலை தேடிக்கொள்வார்கள். சினிமா பார்க்க ஆர்வமுள்ளவர்களுக்கு ஆயிரக்கணக்கில் பழையப்படங்கள் இருக்கின்றனவே.

  • SarathiKannan - ,

   நிச்சயமாக நன்பரே...அப்போதுதான் நமது இளைஞ்ர்களின் கவனம் குடும்பத்தின் மீதும் தமிழ் சமூகத்தின் பிரச்சினைகள் மீதும் இருக்கும்.

 • Sivagiri - chennai,இந்தியா

  சினிமாவுக்கு என்று தனி பக்கங்களை போடுவதை பத்திரிகைகள் நிறுத்த வேண்டும். தனி இணையதள பக்கங்களையும் நிறுத்த வேண்டும்.

 • Ramaswamy Sundaram - Mysore,இந்தியா

  அப்பாடி சனி விட்டது... ஆடுவோமே பள்ளு பாடுவோம் அனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று..... அதான் வீட்டுக்கு வீடு டிவி லியே சினிமா காட்டுறானுங்கள்ல? அப்பறம் ஏன்னா? புதுப்படம் எடுத்து அதை டிவில காற்றது? ஜனங்களுக்கும் சந்தோஷம் சினிமா எடுக்கிறவனுங்களுக்கும் துட்டு கிடைக்கும்.... தியேட்டர் காரனுங்க வாய்ல தான் மண்ணு.... ஒவ்வொத்தனும் ரசிகர்களின் ஆசையை புரிஞ்சிக்கிட்டு கள்ளமார்கெட்ல டிக்கெட் வித்து சம்பாதிச்சானுங்கள்ல சாவுங்கடா.

 • வால்டர் - Chennai,இந்தியா

  டிக்கட்டு 150, கார் பார்க்கிங் 100, பாப் கான் 150, பப்ஸ் 100, ஒரு ஆளுக்கு 500 ஓவா. எவன் போவான்.

 • karthi -

  Really good news.

 • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

  நாடு நலம் பெற வளம் பெற தேட்டர்கள் ஒழிய வேண்டும் அனைவரும் சேமித்து சந்தோசமாகா வாழவேண்டும் நாம் உழைத்து அவர்களிடம் கொண்டு கொட்டுகிறோம்

 • M Vadivel srisamyuktha - Karur aravakurichi,இந்தியா

  மகிழ்ச்சி கேட்க இனிமையாக இருக்கிறது .டைம் பாஸ்சுக்கு உலகம் மொபைல் வடிவில் கையில் உள்ளது. மழை இல்லை மற்றும் ஜி.எஸ்.டி மக்கள் உணர்ந்து செயல்படுகிறார்கள் என்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. சினிமாவை தவிர்ப்போம் இதை வரவேற்போம்

 • Tamilan - California,யூ.எஸ்.ஏ

  Tamilagamae dhayavu seidhu vilithu kol. Nee munnera cinemaavaai vittoli. Koothaadigal vaalkai ini ambo

 • shankar - chennai,இந்தியா

  Ticket rate to be reduce at Max 70 rupees parking 20 rupees, popcorn 40 rupees orelse Theatre get closed soon😜😜vivegam will be big disaster got an info movie output is not to the level.

 • Shree Ramachandran - chennai,இந்தியா

  தமிழகம் நல்லநிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது.

 • CSK - Chennai

  First Theatre Owners need to reduce eatable items and paejing charges immediately.

 • Tamil - Trichy,இந்தியா

  மிக்க மகிழ்ச்சி. இப்பயாவது தமிழன் விழித்துக்கொண்டானே

 • kuppusamy - chennai,இந்தியா

  மதுவைவிட மோசமானது சினிமா, அது உடலை கெடுக்கும், இது மனதை கெடுக்கும். மதுக்கடையும் சினிமா தியேட்டரும் மூட வேண்டியவை தான்.

 • ஜாம்பஜார் ஜக்கு - Chennai,இந்தியா

  பிக் பாஸ் வாழ்க.

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  நீங்கள் கொடுக்கும் அதிக விலை மங்குணிகளையே சென்றடையும்..... அதனால் தியேட்டர் போவதை தவிர்க்கவும்..... மங்குணிகள் திட்டம் பலிக்காது..

 • Hari Krishnan - Coimbatore,இந்தியா

  அருமை அருமை.... மூடுங்கடா சட்டுபுட்டுன்னு. கொள்ளையடிக்கிறதுமில்லாம, கொல்லாப்பக்கமா வந்து அரசியல் நாடகம் வேறே, வாழ்க பாரதம். வளர்க GST.

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  மக்களே தயவு செய்து பார்க்கிங் கட்டணம், பாப்கார்ன் மற்றும் இதர தின்பண்டங்கள் விலை குறைக்கும் வரை தியேட்டர் போகாதீர்கள்.

 • S A Sarma - Hyderabad,இந்தியா

  தமிழ் நாட்டில் என்று சினிமா அரங்கில் கூட்டம் இல்லையோ, அன்றுதான் நாம் முன்னேற முடியும். சினிமாவும் தமிழ்நாட்டு விதியும் இணைந்து தமிழ்நாட்டை அழித்து விட்டது. சினிமா நமது கலாச்சாரத்தை அழித்து விட்டது. சினிமாவை பயன்படுத்தி அரசியல் நாடகம் தமிழ்நாட்டில் நடந்து வருகின்றது. சினிமாவின் மாயத்திரை விலக வேண்டும்.

 • வாழ்க​ பாரதம் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  குடிகார வெட்டிக்கூட்டம் வோட்டை விலைக்கு விற்கும் கூட்டம் சினிமாவிற்கு போகாமல் புறக்கணிக்கமாட்டார்கள். சினிமா வியாதிக்காரர்கள் பயப்பட வேண்டாம். சினிமா தான் முக்கியம். தன் பெற்றோர் செத்தாலும் பரவாயில்லை தங்கள் நாயகன் நாயகி ஐரோப்பாவில் நடனம் ஆடவேண்டும் என்று நினைக்கும் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே உதித்த தமிழார் கூட்டம் அப்படி ஒன்றும் சினிமா பழக்கத்தை கைவிடமாட்டார்.

 • J-Gun - chennai,இந்தியா

  இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே

 • ARULARASAN - chennai,இந்தியா

  மிக மிக மகிழ்ச்சியான செய்தி.திரை அரங்குகள் நிரந்தரமாக மூடப்பட வேண்டும்.

 • velavan - Grenoble,பிரான்ஸ்

  டிக்கெட், நொறுக்கு தீனி மற்றும் வாகன நிறுத்த கட்டணம் குறைக்கும் வரை மக்கள் திரைப்படத்தை புறக்கண்ணிக வேண்டும் ......பகல் கொள்ளையர்கள்

 • appaavi - aandipatti,இந்தியா

  இனியாவது கூத்தாடிகளுக்கு கோடி கோடியை சம்பளம் கொடுப்பதை நிறுத்துங்கள்...தியேட்டர்கள் பிழைக்கும்.

 • balaji - chennai

  Abirami annan thane yellathaiyum arambichithu. 250 ticket velai vecha evvan da varuven.

 • சுவாமி சுப்ரஜனாந்தா - Kualalumpur,மலேஷியா

  Poverty line is alarming.

 • சுவாமி சுப்ரஜனாந்தா - Kualalumpur,மலேஷியா

  சபாஷ் மக்களுக்கு இப்பொழுதான் விழிப்புணர்வு வந்துள்ளது. படிக்கும் பழக்கத்தை அதிகமாக்கி கொள்ளுங்கள் மக்களே.

 • Fletcher Ben - chennai,இந்தியா

  happy news... please please boycott all these idiots... we are seeding them atlast asking to rule us. Lets start..

 • Fletcher Ben - chennai,இந்தியா

  சினிமா பார்க்காத அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி... தமிழன் விழித்து விட்டான் ....

 • Hari - chennai,இந்தியா

  தியேட்டர்காரன், சினிமாகாரனுக்கு சிம்பாலிக்கா மிரட்டல் விடுறான். நம்ம உத்தம புத்திரர்களாவது திருந்துவதாவது? இந்த அசித்து, விசய்யி படம் வந்தா, கரச்சா மண்டை ஸ்டைல்ல, அப்பன் காச புடிங்கிட்டு வந்து, ஜாலியா என்ஜாய் பன்றேன்னு சொல்லிக்கிட்டு வாள்வாள்ன்னு கத்திக்கிட்டு, பாலூத்திகிட்டு வந்துற மாட்டானுக? அடுத்தவன் காசுல வாழற பொறுப்பான பொறுக்கிகளுக்கு GST யாவது மண்ணாங்கட்டியாவது.

 • RAJASEKARAN RAJASEKARAN - chennai,இந்தியா

  குட் நியூஸ்,எல்லா தியேட்டர்களையும் மூடட்டும் ,இப்போ படம் இல்லாம குறைஞ்சா போயிட்டோம்

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  சினிமா theatre எல்லாம் மூடிட்டா மக்கு தமிழன் எப்படி அடுத்த cm ஐ தேர்ந்தெடுப்பான்,

  • Senthil - Kumbakonam,இந்தியா

   Next CM Tamilrockers

 • Kailash - Chennai,இந்தியா

  சந்தோசம் தான். மக்கள் இப்போதுதான் விழித்துள்ளார்கள் ஆனால் எல்லா பிரச்னையும் ஆகஸ்ட் 10 தேதிக்குள் முடித்து கொண்டால் நல்லது ஏன் என்றால் என் தல படம் வருகிறது.

 • Raju - jersi,யூ.எஸ்.ஏ

  கெட்டது போகட்டும் . நல்லது நடக்கட்டும்.. சுபம்

 • John Selvaraj - Dindigul,இந்தியா

  சமூக மாற்றத்தை உருவாக்கிய GST க்கு நன்றி. (நன்றி - திரை உலக சமூக மாற்றத்திற்கு மட்டும்)

 • balaji - chennai,மத்திய ஆப்ரிக்க குடியரசு

  good news

 • Appu - Madurai,இந்தியா

  மக்கள் திருந்துகிறார்கள் என்பது மிகுந்த சந்தோசமான விஷயம்...தியேட்டர் உரிமையாளர்கள் வேறு பிழைப்பை பார்த்து சென்றால் தமிழக திரை துறை இழுத்து மூடும் நிலை வரும்..அப்படியும் அரசு திருந்தா விட்டால் முழுதுமாக இந்த தொழில் பெர்மனெட்டாக மூடிவிடலாம்.

  • குறையொன்றுமில்லை - குன்றக்குடி,இந்தியா

   appukkutty athu romba thappu kutty

 • பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ

  சினிமா நாசமாக போகவேண்டும்

 • K.Sugavanam - Salem,இந்தியா

  நல்ல செய்தி..தியேட்டர்களை வேறு பயன்பாட்டுக்கு விட்டு பொழைப்பை நடத்த இதுவே தக்க தருணம்..

 • narasimha - bengaluru

  முதலாளிகள் அடைப்பு நடத்தியதற்கு சரியான பாடம் முள்ளமுள்ளால் தான் எடுக்க வேண்டும்

 • kcs -

  Ticket price rise is not because of GST. They increased the base price itself from 86 to somewhere around 120 if I am correct.

 • Rajasekar - trichy,இந்தியா

  மிக விரைவில் மூடு விழா வாழ்க மோடி மற்றும் தமிழக அரசுவிற்கு மிக்க நன்றி.

 • Baskar - Paris,பிரான்ஸ்

  மக்களுக்கு வருகின்ற வருமானத்தில் இந்த செலவு தண்ட செலவுதான். இதற்க்கு வீட்டிலேயே இருந்து குடும்பத்துடன் படம் பார்க்கலாம். கார்ப்பார்க்கிங் மேலத்தீனி பெட்ரோல் செலவுகள் மிச்சம். முக்கியமாக இப்போது நடிக்கும் நடிகர்கள் படத்தை பார்க்காமல் இருப்பதே சிறந்த வழி.

 • ashok - madurai,இந்தியா

  ரொம்ப சந்தோசம்

 • Anandha Kumar - Bangalore,இந்தியா

  இதே மாதிரி மிக அதிக அநியாய விலைக்கு விற்கும் ஹோட்டல் களையும் மக்கள் தவிர்க்க வேண்டும். அப்பொழுது தான் உணவு விலை குறையும், ஒரு சாதாரண மிடில் கிளாஸ் மக்கள் எந்த ஹோட்டல் உள்ளேயும் நுழைய முடியாது, அத்தனை விலை ஏற்றி வைத்து இருக்கிறார்கள்.

 • Kundalakesi - Coimbatore,இந்தியா

  Everything available online. why waste money to these morons.

 • siva -

  thamizhagam vidiyalai nokki

 • Raja Manakavalan - Coimbatore,இந்தியா

  டிக்கெட்டில் கொள்ளை, பார்க்கிங்கில் கொள்ளை... தின்பண்டங்களில் கொள்ளை.. படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் ஏ.சி.யை அணைத்து விடும் நரித்தனம்... எவன் வருவான் தியேட்டருக்கு? சினிமா தியேட்டர்கள் இப்படியாவது மூடப்படட்டும். மக்களின் காசும் நேரமும் மிச்சம்...

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  மக்கள் திரைப்படம் பார்க்காமல் புறக்கணிக்கும் பார்க்கிங் கட்டணம் திரை அரங்குகளில் விற்கும் தின் பண்டங்கள் விலை குறைக்கும் வரை வேலை நிறுத்தம் தொடர்வது நல்லது.

 • roy - tirunelveli

  happy news, let them shut the theaters, they are day light robbers

 • roy - tirunelveli

  happy news, let them shut the theaters, they are day light robbers

 • roy - tirunelveli

  happy news, let them shut the theaters, they are day light robbers

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  People are waiting for such situation in our Tamil nadu cenima theatres for long time before as the cenimas are totally spoiling the lives of the younger generation by their cheap western culture dress culture,double meaning dialogue and songs.The cenimas producers,directors and actors are growing rich day by day at the costs of the cenima goers. It is very good and happy news now at least the people are realised by now and not rushing as mad and fools to the cenima theatres as before is a historical change and this news should be engraved on Thanjavur Peria Kovil Kalvettu for the future reference without fail.

 • Vaal Payyan - Chennai,இந்தியா

  வருமானம் பெருகாத நிலையில் மக்கள் இந்த சுமை எல்லாம் ஏற்று கொண்டு சினிமா பார்க்க தியேட்டர் க்கு வர வேண்டும் என்று இவர்கள் நினைப்பது .... கொடி கட்ட கோவணம் கேட்பது போல உள்ளது மொபைல் போனில் படம் வந்தால் தான் திரை துறை விளங்கும்

 • Sundar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Good news.

 • Sundar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Good result after GST. Movie halls will be converted into Marriage Hall or Hospital or Mall in future. Government should not withdraw entertainment tax wish are forrural development of local bodies.

 • Kalangala Subbudu - Chennai,இந்தியா

  Best news of the decade

 • rajj - Thanjavur,இந்தியா

  காசுக்காக மக்கள் வரவில்லை என நினைக்கவேண்டாம். நீங்களும் உங்கள் படங்களும் என தான் வரவில்லை. மேலும் நீங்கள் ஏதாவது நடித்து மக்கள் மனதை மாற்றுவது என எதிர்காலத்த்தில் நினைக்கவேண்டாம்

 • Siva Subramaniam - Coimbatore,இந்தியா

  சினிமா பொழுது போக்கு என்பது போய்,வியாபாரம் ஆகிவிட்டது மக்கள் நல்ல படங்களையே பார்க்கவேண்டும்.ஒருகாலத்தில் பத்தாவது வரை படிக்கும் செலவில் இப்போ ஒரு சினிமா மட்டும் தான் பார்க்க முடியும். மக்களும் இதைத்தானே விரும்புகிறார்கள்

 • Susil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  மூடிக்கிட்டு போங்க , நாடு உருப்படட்டும்.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  மோடி புண்ணியத்தில் தமிழனின் ஒரே என்டர்டைன் மைண்டும் காலி.... வீட்டிலே முடங்கி BIG BOSS பார்க்கவேண்டியது தான்....

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அநியாயத்திற்கு விலையை ஏற்றினால் எப்பிடி? கொஞ்சம் மல்லிப்பூ கொஞ்சம் அல்வா சினிமா பார்த்த திருப்தியை ஏற்படுத்திவிடும்...

 • sriram -

  அனைத்து தியேட்டர்களையும் மூடி விடுங்கள். சினிமாவே இனி வேண்டாம்.

 • christ - chennai,இந்தியா

  ஆபாசமும் ,அருவருப்பும் நிறைந்த குப்பை படங்கள் குப்பை தொட்டிகளுக்கு செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை

 • Rajesh Rajan - bangalore,இந்தியா

  மகிழ்ச்சி... வாழ்க தமிழ்

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  ரொம்ப நல்லது...தமிழ்நாடு சீக்கிரம் முன்னேறிவிடும்....வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு.

 • தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா

  சந்தோசம் இவங்க மூடினால் எவன் நடிக்கும் படமும் ஓடாது எவனும் இவங்களை வைத்து படம் எடுக்க மட்டம் மக்களும் தலைமுறையும் பாதுகாக்கப்படும்

 • ssssss - Chennai,இந்தியா

  சந்தோஷமான செய்தி.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement