Advertisement

மூன்று நாளில் ரூ.33.17 கோடி வசூலித்த ஜகா ஜசூஸ்

அனுராக் பாசு இயக்கத்தில், ரன்பீர் கபூர், கத்ரீனா கைப் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஜகா ஜசூஸ். சுமார் ரூ.75 கோடி பட்ஜெட்டில் உருவாகன இப்படம் இந்தியா முழுக்க 1800 தியேட்டர்களில் ரிலீஸானது. ஜகா ஜசூஸ் படத்திற்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதன்காரணமாக படத்தின் வசூலும் சிறப்பாக உள்ளது. படம் வெளியான முதல்நாளில் ரூ.8.57 கோடியும், இரண்டாம் நாளில் ரூ.11.53 கோடியும், மூன்றாம் நாளில் ரூ.13.07 கோடி... என மொத்தம் ரூ.33.17 கோடி வசூலித்திருக்கிறது. வரும் வாரங்களில் படத்தின் வசூலை பொறுத்து பாக்ஸ் ஆபிஸில் இணைவது பற்றி தகவல் தெரியவரும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement