Advertisement

தமிழகம் முழுக்க விவரங்களை திரட்டித் தாங்க...! - ரசிகர்களுக்கு ரஜினி உத்தரவு

அரசியலில் இறங்குவது குறித்து தனக்கு ஏற்பட்டிருக்கும் திடீர் ஆர்வம் குறித்து, ரசிகர்களை தொடர்ச்சியாக சந்திக்கத் துவங்கி இருக்கும் நடிகர் ரஜினி, தமிழகத்தின் தேவைகள் குறித்து நிறைய விஷயங்களை சேகரித்து தருமாறு, தன்னை சந்தித்த ரசிகர்களிடம் கூறியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.கடந்த 12 ஆண்டுகளுக்கு முன், தன்னுடைய ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினி, அவ்வப்போது, ரசிகர்களை சந்திப்பதாக அறிவிப்பு வெளியிட்டு விட்டு, அதைப் பற்றி கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்து வந்தார். ஆனால், ரஜினியை எப்படியாவது சந்தித்து, அவரை வலியுறுத்தி, அரசியலுக்குள் அழைத்து வந்து விட வேண்டும் என்று தவம் கிடந்த ரசிகர்களின் வாழ்க்கை வீணானதே தவிர, பெரிதாக எதுவும் நடந்து விடவில்லை.ஆனால், அவ்வப்போது மேடை கிடைக்கும் போதெல்லாம், ரஜினி, தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து, பூடகமாக சில விஷயங்களை மட்டும் சொல்லி விட்டு செல்வதை வாடிக்கையாக்கி வைத்திருந்தார். இதனால், ரஜினி இனி அரசியலுக்கு வர மாட்டார் என, ரசிகர்கள் உறுதியாக முடிவெடுக்க முடியாமல் தவித்து வந்தனர்.இந்நிலையில், திடீரென தமிழகத்தில் உள்ள தன்னுடைய ரசிகர்கள் பலரையும் சென்னைக்கு வரவழைத்து அவர்களை சந்திப்பதோடு, புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சியும் நடத்தியுள்ளார். அப்போது, அவர்களிடம் பேசும் ரஜினி, விரைவில் தான் அரசியலில் ஈடுபட தயாராக இருப்பதாக சொல்லி, அவர்களை உற்சாகப்படுத்துகிறார். ஆனால், எப்போது அரசியல் பிரவேசம் என்பது குறித்து மட்டும் எந்தத் தகவலும் வெளியிடவில்லை.இப்படி ரசிகர்களிடம் பேசும்போது, அவர்களுக்கு சில அசைன்மெண்ட்களையும் ரஜினி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து ரஜினி ரசிகர் மன்றத்தின் முன்னாள் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:நீண்ட காலத்துக்குப் பின் ரஜினியை சந்தித்ததில் எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி. அவர், தான் எப்படியும் அரசியலில் குதிப்பேன் என்று சொல்லி உள்ளார். அதனால், ரசிகர்கள் அனைவரும் சந்தோஷமாக உள்ளோம். அரசியலில் இறங்குவதற்கு முன், சமூக ரீதியில் அவர் சில விஷயங்களை செய்து விட்டு, அதன் பின், தீவிர அரசியலில் இறங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதற்காக தமிழகம் முழுக்க சில விவரங்களை திரட்டச் சொல்லி எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அவர் திரட்டச் சொல்லியிருக்கும் விவரங்கள்:* தமிழகத்தில் நிலவும் வறட்சியைப் போக்க என்ன செய்யலாம்? நிபுணர்களின் கருத்துக்கள்...* உள்ளாட்சி அமைப்புகள் எந்த அளவுக்கு சுதந்திரமாக தமிழகத்தில் செயல்படுகின்றன?* ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக அளவில் ஊழல் செய்யும் அதிகாரி யார்? அரசியல்வாதி யார்?* ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மதுக்கடைகள் எவ்வளவு? விற்பனை அளவு எவ்வளவு?* ஒவ்வொரு மாவட்டத்திற்குமான நீர் ஆதாரம் என்ன? நிதிகள் என்னன்ன? எந்தந்த பகுதிகளில் உள்ள நதிகளில் எந்த மாதங்களில் எவ்வளவு தண்ணீர் வருகிறது?* நிலத்தடி நீர்மட்டத்தின் நிலை என்ன?* எத்தனை அடிக்கு போர் போட்டால் தண்ணீர் கிடைக்கிறது?* தென்னக நதிகளை இணைக்க சாத்தியப்படும் திட்டங்கள் குறித்து நிபுணர்கள் கருத்து...* நேர்மையாக செயல்படும் அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு...* உங்கள் மாவட்டங்களில் எந்த சினிமா நடிகர் பிரபலமாக உள்ளார்?* நடிகர் ரஜினி அரசியலுக்கு வந்தால், மக்கள் மன நிலை எப்படி இருக்கும்?* மாநில அரசின் செயல்பாடு; மத்திய அரசின் செயல்பாடு எப்படி?* எதிர்கட்சியினர் செயல்பாடு குறித்து மக்கள் நினைப்பது என்ன?இப்படி பல்வேறு விவரங்களை திரட்டித் தர ரஜினி பணித்துள்ளார். ஊருக்குச் சென்றதும், இந்த விவரங்களெல்லாம் திரட்டி அனுப்பப்படும். இதையெல்லாம் வைத்து, அவர் தமிழகத்தின் நலன்களுக்காக நிறைய கோரிக்கைகளுடம் பிரதமர் மோடியை சந்திக்கவும் திட்டம் வைத்திருப்பதாகவும் பேச்சினிடையே தெரிவித்தார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (70)

 • Ramshanmugam Iyappan - Tiruvarur,இந்தியா

  ஜெயா இருக்கும் வரையில் பெட்டி பாம்பாக அடங்கியிருந்தார், இப்போது பிஜேபி தமிழ்நாட்டில் குட்டையை குழப்பி மீன் பிடிக்க முயற்சி..இது ஒருபோதும் பலிக்காது..இனி சிங்கம் போல ஓர் தமிழன் அரியணை ஏறுவர். பொறுத்திருந்து பாருங்கள்...இது காலத்தின் கட்டாயம்..பிஜேபி யின் கொட்டம் அடக்க படும் நாள் விரைவில்.....

 • Raj - Sheffield,யுனைடெட் கிங்டம்

  இதில் முக்கால் வாசிக்கு மேல் RTI போட்டாலே கிடைத்திடும் . இதை கூட செய்ய முடியாம , இந்த வேலையெல்லாம் மத்தவங்க செஞ்சிட்டா இவர் என்ன உக்கார்ந்து வெல்லம் சாப்பிட்டிட்டு இருப்பாரா ?

 • Stalin - Kovilpatti,இந்தியா

  நானும் ரஜினி இரசிகன் தான் நீங்க தயவு செய்து அரசியலுக்கு வர வேண்டாம் , ஆன்மிகத்தில் போங்க எங்களுக்கு என்றும் வெளிக்காட்டிய இருங்க . அரசியல் வேண்டாம்

 • Stalin - Kovilpatti,இந்தியா

  நானும் ரஜினி ரசிகன் தான் .. உங்களுக்கு அரசியல் வேண்டாம் , ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளின் தவறை சுட்டி காட்ட தயங்கும் நீங்க வரவே வேண்டாம் .. பணம் தான் உங்களுக்கு முக்கியம்., எங்களை எப்போதும் தள்ளி வைத்தே பார்க்கிறிங்க , இந்த சந்திப்பு கூட மத்திய அரசு சொல்லிதான் நடத்தப்பட்டது ..

 • Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அய்யா நீங்கள் மிக்க நல்லவர்தான் தயவு செய்து தமிழகத்தை விட்டு விடுங்கள் தமிழர்கள் இறை பக்தி நிறைந்தவர்கள் தான் ஆனால் அதே சமயம் தமிழ் இலக்கியங்களை நாங்கள் படித்த வரையில் தமிழர்கள் சிறப்பாகவே ஆட்சி புரிந்துள்ளார்கள் தமிழ் மக்கள் இனி தன் தலைவன் தவறு செய்ய அனுமதிக்க மாட்டார்கள் நீங்கள் உங்கள் சொந்த வேலைகளை கவனியுங்கள் ஏதோ உங்களை விட்டால் வேறு ஆளே இல்லை என்பதுபோல பேசுகிறீர்கள் அதே சமயம் ஆண்டவனிடத்தும் நெருங்கிய தொடர்பில் உள்ளீர்கள் ஒரு நாள் நான் இந்திர லோகத்திலிருந்து இப்பொழுதுதான் வருகிறேன் என்று கூறுவீர்கள்

 • Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்த படம்தான் ஏற்கனவே ரிலீசு ஆயிடிச்சே அய்யா நீங்கள் நம்பியிருக்கும் உங்கள் ரசிகர்மன்ற தலைவர்களும் கிட்டத்தட்ட அரை கிறுக்கர்களே அதிலும் பெரும்பாலானோர் சென்னையில் ஆட்டோ ஓட்டுபவர்கள் இவர்களை நம்பி தனியே ஒரு பெண் அதுவும் சென்னையில் கூட பயணிக்க பயப்படுகிறார்கள் இவர்களை நம்பி நீர் உங்களின் பின்னால் தமிழகம் ? பாவம் தமிழ் மக்கள்

 • Irudayarab Rajan - madurai ,இந்தியா

  ரசிகர்களே இல்லை பின் எப்படி திரட்டுவது வேண்டாத வேலை இவருக்கு நிச்சயம் தாக்குப்பிடிக்க முடியாது

 • தனஞ்செயன் - chennai,இந்தியா

  எந்திரன் 2 .௦ படம் வந்தா திமுக, அதிமுக, பாமக , தேமுதிக நாம் தமிழர் vc கட்சி என்று மற்ற கட்சி தொண்டர்கள் ஒருவர் கூட இந்த படத்தை பார்க்காதீர்கள்..ரஜினி ரசிகனுங்க மட்டும் 1000 / ௨௦௦௦ குடுத்து பார்க்கட்டும்.. அப்போ தெரியும் இவனுங்க தலைவர் டம்மி பீஸ் என்று...

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  இந்த கேள்விகள் கேட்பதிலிருந்து பச்சை தமிழன் என்று பொய்விளம்பி கூத்தாடிக்கு, தமிழ்நாட்டை பற்றி ஒரு மண்ணும் தெரியல. இல்ல இந்த மனிதன் டிவி, தினசரிகளை தினமும் படித்தாலே தமிழ் நாட்டின் நிலவரம் அணைத்து தெரிந்து கொண்டு அதற்க்கு தகுந்தாற் போல் அரசியல் பேச்சு அரசியல் வாழ்க்கையை தொடரலாம். உண்மையிலேயே இந்த நடிகன் இவ்வளவு வருடங்கள் மெட்றாஸில் குப்பை கொட்டி என்ன பயன். இந்த நடிகன் தமிழ் நாட்டை பற்றி மார்க்கண்டேயன் கட்சு சொன்னது போல் தன தலையில் வெற்றிடத்தை வைத்துள்ளான். அதான் தமிழ் நாட்டை தெரிந்துகொள்ள உத்தரவு போட்டுள்ளான். தமிழ் நாட்டை பற்றி zero knowledge. ஆனால் தமிழ் நாட்டுக்கு சிம் ஆகவேண்டுஎன்ற பேராசை.

 • Ram - Tiruchirappalli,இந்தியா

  கணக்கு எடுப்பதில் பயனில்லை. களையெடுக்கவேண்டும். முடியுமா உங்களால்? வட்டம் மாவட்டம் வாரியாக ரசிகர் மன்றங்களை மக்களுக்கு அடையாளம் காட்டுங்கள். மக்களின் நியாயமான விண்ணப்பங்களை அல்லது கோரிக்கைகளை பெறுங்கள். அவைகளை லஞ்ச லாவண்யம் இல்லாமல் தீர்த்துவையுங்கள். நீங்கள் உங்களின் சொந்த பணத்தை செலவழிக்க வேண்டாம். ஆனால் நீங்களோ அல்லது உங்களை சேர்த்தவரோ இதன்மூலம் பணம் சம்பாதிக்க கூடாது. பொதுநலம் கொண்டவர்களையும் மற்றும் தேசப்பற்று உள்ளவர்களையும் ஆதாயம் கண்டு இச்சேவைக்கு பயன்படுத்துங்கள். மாதம் ஒரு மாவட்டம். இதனை செய்து பாருங்கள். இதனில் கல்வி, நீராதாரம், விவசாயம், விலைவாசி, மின்சாரம், உடல்நலம் ஆகியவற்றிக்கு முன்னுரிமை அளியுங்கள். மக்கள் வாழ்க்கைத்தரம் உயரும். தமிழ் நாடும் வளம்பெறும். நீங்கள் உங்கள் தொழிலையும் பாருங்கள். குடும்பத்தையும் கவனியுங்கள். அத்தோடு இத்தனையும் செய்யுங்கள். நானும் மற்றும் பலரும் உங்களுடன் போருக்கு உதவ தயார். மக்கள் மனதை மட்டுமே வெல்லவேண்டும் என்கின்ற குறிக்கோளுடன் மட்டுமே நீங்கள் கூறும் போர் நடைபெறவென்றும் என்பது என் எண்ணம் மற்றும் திண்ணம். வெற்றியைநோக்கி ஒரு புனிதமான அன்பு பயணம், ஆரம்பிபிப்போமா?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ரஜினி முதலில் எந்த கட்சியும் துவங்காமல் அவர்கள் தொண்டர்கள் மூலம் நாட்டின் நல பணிகளை நன்கொடை வசூலிக்காமல் செய்யட்டும்... முக்கியமாக நீர்நிலைகளை ஆழப்படுத்த கறைகளை வலுப்படுத்தி,,ஆக்கிரமிப்புகளை அகற்றி.... இப்பிடி நல்ல காரியங்கள் செய்யட்டும்...பிறகு மற்றதை பார்க்கலாம்.,

 • Balan Palaniappan - Chennai,இந்தியா

  சிங்கப்பூர் மருத்துவமனையில் ஆறு மாதம் இருந்தார். கவலைக்கிடமாக இருப்பதாக செய்தி வந்தது , எதோ தலைக்கு வந்தது தலையோடு போய்விட்டது என்று பிழைத்துக்கொண்டார். இவர் சினிமாவில் வேண்டுமானால் ஒரு நிமிடத்திற்கு வேகமாக கையையும் காலையும் அசைத்து ஸ்டைல் பண்ணி ரசிகர்களை மகிழ்விக்கலாம் ஆனால் இவருடைய வயதும் இவரின் ஆரோக்கியமும் நிச்சயம் இவர் ஏற்றுக்கொள்ளத்தக்கவரல்ல என்பது எல்லோருக்கும் புரியும். நாம் ஓரும் இளந்தமிழரைதான் தேர்வு செய்ய வேண்டும். வாழ்வின் கடைசி அத்தியாயத்தில் இருக்கும் இவரை அல்ல. ஒரு படத்தி இவர் வாழ்க்கையை ஆறு ஆறாக பிரித்துக்கொள் என்று பாடுவார். அதில் வரும் எல்லா ஆறுகளையும் தாண்டிவிட்டார். இப்போது ஓய்வெடுக்கும் வயது. ஆனால் ஆசை குறைந்தபாடில்லை. தமிழர்களே புரிந்து கொள்ளுங்கள். இவரல்ல நமக்கு வேண்டியது.

 • Gnanam - Nagercoil,இந்தியா

  இவர்களையெல்லாம் தலையில் தூக்கிவைத்து ஆடவும், துதிபாடவும், காலில் விழுந்து வணங்கவும் தமிழன்தான் வேண்டும். ரஜனியின் (சிவாஜிராவ் காய்க்கவாட்) சொந்த நாடான கர்நாடகாவில் உள்ள மக்களிடம் விவரங்களை சேகரிக்க கூடாதா?

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  வாழ்த்துக்கள்

 • Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்

  போதுமடா சாமி தமிழகத்தில் தமிழனை தவிர மற்றவர்கள் அனைவரும் நலமுடனும், வளமுடனும் வாழ குனிந்து கொடுத்து கூனி விட்டான் தமிழன், இனி தமிழன்டா என நிலத்தை பார்த்துத்தான் கத்தவேண்டும், அடுத்து பூமிக்குள்

 • MOUNTAINKING - Chennai,இந்தியா

  ரஜினி சார் , நீங்க நல்லவங்க . தீவிர அரசியலில் இறங்குங்க . வெற்றி நிச்சயம் . தமிழ்நாட்டிலே நீங்க நினைக்கிற மாதிரி நல்ல மாற்றத்தை கொண்டுவரலாம் . வாழ்க வளமுடன்.

 • Susil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  எல்லோரும் உங்களை திரையில் மட்டுமே பார்க்க விரும்புகிறார்கள். போதுமா , இதுக்கு மேல எதாவது யோசனை வேண்டும் என்றால் விஜயகாந்தை கேளுங்கள் அவர் சொல்வார்.

 • Arun - Chennai,இந்தியா

  who are we to stop him? if he really has good intentions and wants to do something for this land and people.. let him try his best.. stopping one based on his race or e is strictly condemnable..

 • rajaram avadhani - Tiruchy,இந்தியா

  விநாச காலே விபரீத புத்தி. மகர ராசிக்கு வரும் டிசம்பர் முதல் ஏழரை சனி ஆரம்பம். இதற்கு மேல் ஒன்றும் சொல்ல வேண்டாம்.

 • Anand - India,இந்தியா

  ஒரு நடிகை இவருடைய செயலை விமர்சித்ததாக படித்தேன். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இவருடைய ரசிகர்கள் அமைதியாக இருப்பது, உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில், இதுவே வேறொரு நடிகரை விமர்சித்திருந்தால், திட்டி, திட்டி, இணையத்தையே நாறடித்திருப்பார்கள். உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயம்

 • VELAN S - Chennai,இந்தியா

  அப்படியா விஷயம் , இதுதான் சாக்கு என்று ஒவ்வொரு ரசிகனும் நான் 5 லட்சம் செலவழித்தேன் , 10 லட்சம் செலவழித்தேன் நீங்கள் கேட்ட டீடைலு கலெக்ட் பண்ண , இதோ நீங்கள் கேட்ட டீடைலு அதுக்கு நான் செலவழித்த 5 லட்சத்தை கொடுங்க , 10 லட்சத்தை கொடுங்க என்று வந்து நிப்பான் , அப்பா தான் ரஜினிக்கு புரியும் அரசியல் இப்படி பட்ட டேஞ்சர் விளையாட்டா இருக்கு , நாம எவ்வளவு சம்பாதித்தாலும் போதாது போலெ இருக்கே , எதெது நம்ம டவுசரை கழட்டி விட்டு , விரட்டி அடித்து விடுவார்கள் போலிருக்கே , என்று பதற பதற அரசியலில் இருந்து விலகி ஓடுவார் , இது நடக்கும் பாருங்க . அப்போது அரசியல் என்பது திருட்டு பய உலகம் என்பதை புரிந்து கொள்வார் .

 • Arachi - Chennai,இந்தியா

  Please go to the internet you will get all data. What is your hypothesis? It is simple Tamil Nadu is -0. Now you are 66. Can you do miracle? It is not two hours cinema, Sir.

 • nanbaenda - chennai,இந்தியா

  தேர்தல் வரும் சமயம் மேலும் மூன்று அல்லது நான்கு வயது கூடி இருக்கும். இந்த வயதில் அரசியல் தேவையா என்பதை சிறிது எண்ணிப்பார்த்தால் நல்லது.

 • ssssss - Chennai,இந்தியா

  ரசிகர்களிடம் கேட்பதை விட துப்பறியும் நிறுவனத்திடம் கொடுத்தால் சரியான ரிப்போர்ட் கிடைக்கும்.

 • Suresh - Nagercoil,இந்தியா

  ரஜினியை பொறுத்தமட்டில் அரசியலில் குதிப்பது தேவை இல்லாத வேலை அவரும் அதை எளிதாக செய்யக்கூடியவர் கிடையாது ஒரு வேளை தேர்தல் வரும் சமயத்தில் வெற்றி பெறும் கட்சியை பார்த்து ஆதரவு தெரிவிப்பார் அவ்ளவுதான். ரஜினியை குறை கூறுவதற்கு ஒன்டும் இல்லை அவரை அழைப்பவர்களின் அறியாமை தான் காரணம். அரசியல் களத்தில் குதிப்பது என்பது சுலபம் இல்லை, உரலுக்கு ஒரு பக்கம் உதை எண்டால் மத்தளத்திற்கு இரண்டு பக்கங்களிலும் உதை கிடைக்கும் என்பதை அறியாதவர் இல்லை, அவர் என்ன தமிழனா எளிதில் ஏமாறுவதற்கு...

 • வேந்தன் - chennai,இந்தியா

  உங்கள் ரசிகர்களை எண்ணினால் எத்தனை முட்டாள்கள் இறக்கிறாரகள் என்ற விபரம் தெரியும். 45 வருடும் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழையும் தமிழ்நாட்டையும் தவிர மற்ற அணைத்து விபரங்கள் இவருக்கு தெரியும். இவர் உறுதியாக சமிஸ்கிருதத்தை கட்டயப்பாடம் என்று அறிவிப்பார். பாபா தான் கடவுள் அய்யனார் எல்லாம் போலி.

 • Siva Subramaniam - Coimbatore,இந்தியா

  தமிழ் நாட்டை ஆண்டவர்களில் பெரும்பாலோர் தமிழகத்தை கொள்ளை அடித்தவர்கள்.மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள்.இப்போ இவருடைய கொள்ளைக்காலம் போல் இருக்கிறது.தமிழர்களில் யாருக்கும் தகுதி இல்லையா இந்த நாட்டை முறையாக ஆள்வதற்கு?பழைய கதை பேசியே மக்களை முட்டாள் ஆக்கி விடுவார்கள்.மக்கள் விழித்துக்கொண்டால் சரி.இவருடைய அறிவிப்பு விஜயகாந்தின் ஒரு படத்தை நினைவுபடுத்துகிறது.அந்த படத்தின் முடிவில் என்னவாயியற்று என்று எல்லோருக்கும் தெரியும்.அப்படி இவர் ஆகாமல் இருந்தால் சரி.

 • dinesh kumar - hosur,இந்தியா

  வாழ்த்துக்கள்......எந்தஎந்த மாவட்டங்களில் என்ன பிரச்னை என்று முதலில் அறிந்து...அதை தீர்க்க விடை என்ன என்பதையும் அறிந்து..அதன் பின் அதற்கு தகுந்த நபர் யார் என்று ஆராய்ந்து செயல்பட்டால் போதும்...சாகயம் போன்றவர்களை அருகில் வைத்து கொள்ளுங்கள்.முதலில் பத்திரிகைகளின் முன் அரசியலுக்கு வர தயாராவதை தெளிவாக கூருங்கள்.அதுவே பல முரண்பட்ட கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி. மக்களை சந்திக்கும் களத்தில் எளிதில் அணுகும் நடிகனாகவும் பின் ஒரு அரசியல் தலைவனாகவும் இருந்தால் மட்டுமே வெற்றி கிட்டும்...துஷ்ட சக்திகள் நல்ல சக்திகளை எதிர்த்து கொண்டுதான் இருக்கும்...தண்ணிரை கூட சல்லடையில் அள்ளலாம்..அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால்...

 • MOH Shajahan - Jeddah,சவுதி அரேபியா

  ரஜினியை விமர்சிக்கும் தமிழர்களுக்கு கடைசி எச்சரிக்கை 'சுயநலவாதி, ஏழைகளுக்கு உதவாதவர், பரட்டையன், தாத்தா,கர்நாடகக்காரன், தமிழின விரோதி' தமிழ் மக்களுக்கு என்ன செய்தான்னு திட்டி தீகிரிங்களே ரஜினி தமிழ் மக்களுக்காக செய்த உதவிகள் பல விளம்பர நோக்கமற்றவை பிரதிபலன் பாராதவை. அவற்றில் சில துளிகள்... 1) முத்து படத்துல தமிழ் மக்களுக்கு தனது சொத்து முழுவதையும் எழுதி வைத்துவிட்டார் மறந்துட்டியா படத்தை திரும்ப ஒருமுறை பார். 2)சிவாஜி படத்துல தமிழ்நாட்டுக்கு காலேஜ், ஆஸ்பத்திரி, ரோடு எல்லாம் செஞ்சாச்சு 3)அருணாசலத்துல 30 நாள்ல 30 கோடிய தமிழக மக்களுக்கு கொடுத்தாச்சு 4)படையப்பால தமிழக மக்களுக்கு கருணை வள்ளலா வாழ்ந்தாச்சு 5)பாபால மந்திரம் மூலம் தமிழ் மக்களுக்கு பணி ஆத்தியாச்சு 6)லிங்கா படத்துல தமிழக மக்களுக்கு சொத்தையெல்லாம் வித்து அணை கட்டியாச்சு இதுக்குமேலேயும் என் தலைவன்கிட்ட வேற என்னதான்யா எதிர்பாக்குரிங்க...? தமிழக வெள்ள மழை பாதிப்புக்கு தலைவர் ஏதாவது செய்யனும்னு எதிர்பாக்குரீங்களா? இவ்ளோ செஞ்சவரு இதுகூட செய்ய மாட்டாரா? அடுத்த படத்துல வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆளுக்கு 1 லட்சம் கொடுக்குற மாதிரி சீன் வைக்கிறோம் போதுமா? இப்ப திருப்தியா? போதாது ன்னா சொல்லுங்கள் அடுத்து வரவுள்ள படத்தில் ஆளுக்கு ஒரு காரு பயிக்கு இப்பிடி குடுக்கிற மாதிரி சீன் போட்டு கலக்கிர்றோம் ,அதுக்கப்புறமும் என் தலைவனை நோக்கி தமிழ்நாட்டுக்கு என்ன செய்ஞ்சீங்க? என்ன செய்ஞ்சீங்கன்னு கேப்பீஙகளா நீங்க?

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  விசிலடித்து , தங்கள் நேரத்தை , பணத்தை ரஜினியிடம் பறிகொடுத்த ரசிகர்கள் . அவர்களுக்கு இந்த கேள்வி பதில் தெரியாது . ஒஞ்சி போன ரஜினி , ஒருவேளை AIADMK கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கலாம் . அங்குதான் ஜெயாவிடம் ஏமாந்துபோன தொண்டர்கள் வழி தெரியாமல் தவிக்கிறார்கள் . AIADMK விலதான் அதிகம் தமிழ் தவிர இதர மொழி பேசும் ஆனால் தமிழர்கள் என்று தமிழ்நாட்டில் வாழும் அண்டை மாநிலத்தவர் அதிகம் உள்ளனர் . அவர்களின் ஒட்டு அவர்க்ளின் பிரதிநிதியாக ரஜினி களம் இறங்கலாம் .

  • johnson - chennai,இந்தியா

   please try to understand what dmk and amdk done to our tamilnadu. karunanidhi and jayalalitha were youngerstage when they are entering the politics. After that so many corruption came into limelight as know everyone. But rajinikanth even as a kannadian and actor now he is 66 years old he earned money lot. He don't need money by entering politics or corruption. The only things is needed good heart and thankful manner. This is very much needed by all the time to do good to people. As my opinion Mr.Rajini will try to make wonder to our tamil region eventhough he belongs otherstate. Because nobody is ready to serve to people honestly. Everyone politician think how to earn money to their generation

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  LET.him.try.his.luck.after.Itisademocratic.

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  தேவைகள்.எவையெவை.45வருடமாக.தமிழகத்தில்.இருப்பவருக்கு.தெரியாதா.

 • SaiBaba - Chennai,இந்தியா

  திரு ரஜினி அவர்களே, ரசிகர்களைக்கொண்டு விபரங்களை திரட்டுவதைக்காட்டிலும் - Nielsen, Hitwise, Google, IPSOS, Greenhouse, askia என்று உலகத்தரம் வாய்ந்த கணிப்பு நடத்தும் நிறுவங்களிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்து மக்களின் மன நிலையை அறிந்து கொள்ளலாம்.

 • Sivagiri - chennai,இந்தியா

  ஏன் . . . இத்தனை வருஷம் இமய மலையில் ஒளிஞ்சிக்கிட்டிருந்தாரோ . . . இப்பத்தான் ஊருக்குள்ள வந்து . . ஊர் நிலவரம் எப்படின்னு விஜாரிச்சிக் கிட்டிருக்காரு.... . ஐயோ பாவம் . . . இவர் விசாரிச்சு தெரிஞ்சு ஒரு முடிவுக்கு வர்றதுக்குள்ள ரெண்டு மூணு எலெக்சன் போயி . . . ஏனய்யா தேவை இல்லாம மண்ணை வாரி ஒங்க தலையில் போடுறதும் இல்லாம . . . ரசிகர்களையும் போடச் சொல்லி . . மக்கள் மேலயும் போடுறீங்க . . .

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  He also don't have any work and the Visil Aduchann kunjugal also don't have any work as taking of photographs along with Mr.Rajinikanth is over.In order to continue his ambition and planning to jump in Tamil nadu politics he has given some assignment to his Visil Aduchann kunjugal and they are also busy with the assignments and before he gets the results he will go abroad for some cenima shootings and when he returns he will maintain silence about his political entry.Again this Mad and fools Visil Aduchann kunjugal go and ask and beg him to jump into politics.Again he will tell God is not yet give him any indication about his political entry.Like that his political entry will be delayed and delayed and finally all will forget Mr.Rajinikanth and his political entry once for all.Mr.Rajinikanth is only passing his time by making his fans busy by giving such statements day by day.

  • Rafi Böšš - Hawally,குவைத்

   wow can you explain to me what service are you doing for our Tamil Nadu ? you are just a keyboard warrior . . . . dont bark at Rajni . . . . . atleast he is trying to do some service which our Tamil nadu politicians cant do

 • Jeeva Vellaisamy - Karaikudi,இந்தியா

  தமிழ் நாடும் தமிழ் நாட்டு மாக்களும் நாசமா போவதை தவிர வேறு வழியே இல்லையா போருக்கு தயாராக இருங்கள், ஆண்டவன் நினைத்தால் (ரொம்ப நாளை தேடிகிட்டு இருக்கிறேன்) அரசியலுக்கு வருவேன். அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமை. யார் வேணாலும் கட்சி அமைக்கலாம் ஆட்சிக்கு வரலாம். ரஜினி அவர்கள் கட்சி ஆரம்பித்து ஒரு வேளை வெற்றி பெற்று முதர்வர் ஆகிவிட்டார் என்றே வைத்து கொள்வோம். 5 வருடங்கள் அல்லது MGR போல 10 வருடங்கள் ஆட்சி நடத்தலாம். அவருக்கு பிறகு இன்றைக்கு அதிமுகவில் ஏற்பட்ட நிலைமை தான் தமிழ்நாட்டிற்கு வரும். பிறகு அஜித் அல்லது விஜய்.. வெக்கமாக இல்லை. தன்னுடைய வாழ்க்கையை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அர்ப்பணித்தவர்கள், தமிழ் மக்களுக்காக நடையா நடந்து இந்த மக்களும், மண்ணும் நல்ல இருக்க வேண்டும் என்று நினைக்கும் தலைவர்கள் இருக்கிறார்கள், தமிழ் மொழி வாழ வேண்டும், தமிழ் மக்கள் வாழ்கை உயர வேண்டும் என்று பாடுபடும் தலைவர்கள் இருக்கிறார்கள். இப்படி எத்தனையோ நல்ல தலைவர்கள் தமிழ்நாட்டில் இருக்கோம் பொழுது..தன்னை சிங்கம், புலி, சிறுத்தை என்று சொல்லிக்கொண்டு சாதி பெருமை பேசிக்கொண்டு திரியும் மக்கள் கண்டிப்பாக நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க போவதில்லை. ரஜினி கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டால் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம். காரணம் ரஜியினின் திறமையோ, செல்வாக்கோ, புகழோ அல்ல. தமிழனின் சாதி. தமிழனின் முட்டாள்தனம், தமிழனின் குடி, தமிழனின் சினிமா மோகம். தமிழன் என்றே சொல்லடா.. தலை குனிந்தே நில்லடா..

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  தமிழகத்தை பற்றியும் தமிழக பிரச்சனைகளை பற்றியும் ஒன்னும் தெரியாது .. ஆனா தமிழகத்தை ஆளனுமாம் மாற்றணுமாம் .. என்ன கொடுமை .. படத்தில் நடித்தார் , இமயமலைக்கு போவார் , பெங்களூரு போவார் .. இதை தவிர வேறு இவர் என்ன செய்தார் ?? தன்னுடைய ரசிகர்களை கூட பல வருடமா சந்திக்காம இப்போ தேவைக்கு சந்திப்பவர் தமிழகத்தை காக்க போறாரா ?? ஏதாவது நல்லது செஞ்சே ஆகணுமாம் .. இது வரை என்ன செஞ்சு கிழிச்சார் ?? விஜயகாந்த் அளவு ஏன் ஒரு விஜய் அளவுக்கேனும் ஏதாவது அள்ளி கொடுத்து இருக்காரா ?? விஜயகாந்த் குடிகாரர் என்றால் ரஜினிகாந்த் யார் ? குல்பி ஐஸ் காரரா ??

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  எதுக்கு ரசிகர்கள் விபரம் திரட்டணும். தினம், தினம் தினமலரின் கருத்து பகுதியை படித்தாலே போதும், உலகமே உங்களை பற்றி என்ன சொல்லுது என்று அறியலாம்,

 • Arjun Thomas - chennai,இந்தியா

  ரஜினி கண்டுக்காம இருந்தார், ரஜினிமன்ற ரசிகர்கள் கிட்டையே கபாலி டிக்கெட் அதிக விலைக்கு வித்தப்ப 2000 , 3000 னு போட்டோ எடுக்க ஏழை உறுப்பினரிடம் காசு கொள்ளை அடிச்சப்ப ரசிகர்கள் புகார் சொன்னப்ப தமிழரை பொறுக்கின்னு சொன்னப்ப. .எப்படியாவது அரசியல்ல கொள்ளையடிக்க ரஜினி மன்றத்தினர்.

 • இளம் செழியன் - chennai,இந்தியா

  ஸ்டாலின், அன்பு மணி, திருமா, சீமான் இவர்களால் தான் அடுத்த படத்திற்கு பிரச்சனை வரும்.. அதனால் தான் இந்த பாராட்டு..இவரு செம்ம வியாபாரி தான்..

 • Murali - DOHA ,கத்தார்

  தமிழ் நாட்டுக்கு மிக மிக அவசியம் தண்ணீர் பிரச்சனை திர்க ஐடியா திரு . ரஜனி ENQUIRY -இல் இருக்கு மற்றும் ஸ்டேட் DEVELOPMENT PLAN ENQUERY -இல் இருக்கு, SO HE WILL DO BETTER THEN OTHER POLITICIAN , பட் ஹி SHOULD JOIN WITH BJP OR ALLIENCE WITH BJP TO SUCEEDE , HIS GOAL . BEST OF LUCK . GOD BLESS HIM .

 • B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா

  கிழிஞ்சது.. விபரமே இப்பதான் திரட்டுறாரா...

 • Senthilkumar - Chennai,இந்தியா

  தமிழக மக்களுக்காக இவர் என்ன நாற்று நடாரா, மஞ்சள் அரைத்தாரா இல்லை ஒரு சிறு அளவிற்கேனும் ஆணி ___ நாரா? காவிரி தண்ணீர் வாங்கி தருவாரா? கச்ச தீவை மீட்பாரா? மெதேன் திட்டத்தை எதிர்பாரா? நியூட்டினோ திட்டத்தை எதிர்பாரா? டாஸ்மாக் மூடுவாரா?மணல் கொள்ளை தடுப்பாரா? விவசாயம் காப்பாரா? எவ்வளவு சொத்து உள்ளது என்று அறிவிப்பாரா? தமிழ் பண்பாடு என்ன என்று தெரியுமா? திருக்குறள் பொருள் தெரியுமா? தமிழ் இலக்கியம் என்ன என்றால் தெரியுமா? இவ்வளவும் அவர் இனிமேல்தான் கத்துக்க போறார் என்றால்..அவர் கர்நாடகா பொய் அரசியல் செய்யலாமே...நமக்கு தேவை நம் பிரச்சினையயை தீர்க்கக்கூடிய ஒரு தமிழ் தலைவர்..தான்...சினிமா நடிகன் அல்ல...மற்றபடி தமிழக மக்கள் ரஜினிக்கு எதிரானவர்கள் அல்ல..அவர் ஒரு நல்ல நடிகர்...சினிமாவில் எவ்வளவு வேண்டுமானாலும் நடிக்கட்டும் பணம் சம்பாதிக்கட்டும்...

  • Ram Kumar - Bangalore,இந்தியா

   100% correct. he can give free education to poor in his school. he can allow poor to get married free in his kalyana mandapam. He earned all the money from tamil nadu, but he did not do anything back to tamils especially to poor.

  • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

   திரு செந்தில் குமார், இதற்க்கு முன் இங்கு இருந்தவங்கள யார் தமிழ் மக்களுக்கு நாத்து நட்டாங்க? மஞ்சள் நட்டாங்க, ஆணி நட்டாங்க -சேச்சே நாங்க, காவேரி தண்ணி வாங்கி தந்தாங்க, கட்ச தீவை மீட்டாங்க, டாஸ்மாக் மூடுனாங்க, விவசாயம் காத்தாங்க,...ஒரு ஆளுசொல்லுங்க ? நெஞ்சில கை வச்சு சொல்லுங்க? ( இவ்வளவையும் தீர்த்திருந்த எங்க ரஜினி வரப்போறாரு) உங்க மனசாட்சியை கேட்டு சொல்லுங்க? எவ்வளவு சொத்து உள்ளதுன்னு நிச்சயம் அறிவிப்பார். எப்போ வேட்பு மனு தாக்கல் பண்ணும் போது தேர்தல் ஆணையத்தில. நீங்க என்ன தேர்தல் அதிகாரியா? நான் தமிழ் நாட்டுல பொறந்த பச்சை தமிழன்...எனக்கு தமிழ் பண்பாடு தெரியாது, திருக்குறள் பொருள் தெரியாது, தமிழ் இலக்கியம் படிச்சதில்லை, தமிழ் தேர்வில் ஜஸ்ட் பாஸ், ( நாம பேசுறது தன்னு சொன்ன, ஒளவையார் பேசுனதெல்லாம் அக்ஸ்போர்ட் இங்கிலீஸ்? ) இப்போ சொல்லுங்க நான் தமிழனா இல்ல வேற்று கிரக வாசியா..என்ன மாதிரி கோடி பேர் இங்க இருக்காங்க அது தெரியுமா? எங்களுக்கு நல்லவன் வந்த போதும்...என் ஜாதிக்காரன் வேண்டாம் ...போன தேர்தலில் நீங்க ஒட்டு போட்டிங்கள்ல தமிழ் ஆளுங்க, ( சீமானும் விஜயகாந்தும் கிடையாது...ஏன்னா அவங்க சினிமா காரங்க) தமிழ் மகன் கலைஞரின் வாரிசு ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், திருமா, வைகோ, மற்றும் பலர் அவர்களிடம் இந்த முறையும் ஓட்ட போட்டு உங்க பிரச்னையை தீர்த்துக்கோங்க...ஏன்னா அவங்கதான் நாத்து நட்டாங்க, மஞ்சள் அரசாங்க, களை புடுங்கினாங்க ( ஆணியையும் தான்)..சரிதானே?

 • Karuppu Samy - MRT,சிங்கப்பூர்

  இதென்ன பெரிய அசைன்மென்ட்? இதெல்லாம் எல்லா கரை கடசிகளுக்குமே தெரிந்த விஷயம் ஆனால் அதை செயல்படுத்த இவரிடம் என்ன திட்டம் இருக்கு? பணம் எங்கே இருக்கு?இவரு பின்னாலே போறவனெல்லாம் காசு பண்ண இருக்கும் கூட்டம்தான் ரசிகன் என்ற போர்வையில்.மொத்தம் இது தேறாத கூடாரம்.

 • deepak - chennai,இந்தியா

  தலைவர் சொன்னது போர் (war) வரும்போது அரசியல் செய்யலாம்னு இல்ல. போர்(Bore) வரும்போது அரசியல் செய்யலாம்னு

 • Sandru - Chennai,இந்தியா

  நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. தனக்கு தானே பெரிய ஆப்பு வைக்கும் முயற்சியில் ரஜினி இறங்கி இருக்கிறார். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 • Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  சூப்பர் ...வாழ்த்துக்கள்.... நீங்கள் உங்கள் தேர்தல் பணியை செய்ங்க தலைவரே. உங்கள வேண்டாம்னு சொல்ற பசங்க எல்லாம் திமுக, அதிமுக, சீமான் கட்சியை சேர்ந்தவங்க.....பொது மக்கள் முடிவு எடுக்கட்டும்..........ஆனால் எக்காரணத்தை கொண்டும் தங்கள் குடும்பத்தை மட்டும் உள்ள விட்றாதீங்க........

 • THANGARAJ - CHENNAI,இந்தியா

  ரஜினி மற்றும் ரசிகர்களே இந்த வயசுக்கு (66) அப்புறம் வயசுக்கு (அரசியலுக்கு) வந்த என்ன? வராமல் போனால் என்ன?

 • KrishnaMurthy -

  நல்ல பேர் எடுக்க சினிமா போதும் கெட்ட பேர் எடுக்க அரசியல் வந்த போதும் இது தான் இன்றைய நிலைமை

  • Senthilkumar - Chennai

   Well Said

 • venkat - vellore,மத்திய ஆப்ரிக்க குடியரசு

  ஸ்டாலின், அன்புமணி, தி்ருமா, சீமான், இவர்களை எல்லாம் நேற்று நல்லவர்கள் என்று சொன்ன ரஜினியால் எப்படி அரசியலில் நேர்மையாகவும் தூய்மையாகவும் இருந்து தமிழக மக்களுக்கு நல்லது செய்யமுடியும் ? இவர்கள் நல்லவர்கள் என்றால் விஜயகாந்த், நல்லகண்ணு தமிழருவிமானியன், இல கணேசன் போன்றோர் ஊழல் வாதி்களா? இப்போதுள்ள தலைவர்கள் ரஜினியை விட எவ்வளவோ பரவாயில்லை.

 • Balaji - chennai,மத்திய ஆப்ரிக்க குடியரசு

  ரஜினி அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டார், ஒதுங்கி இருப்பதே நல்லது. பிஜெபி இவரை வைத்து தமிழகத்தை இயக்க பார்க்கிறது. மக்கள் ஏமாற வேண்டாம். இப்போது இருப்பவர்களில் விஜயகாந்த் ஆயிரம் மடங்கு பரவாயில்லை.

 • Raman Ganesan - Madurai,இந்தியா

  உங்க தமிழன் முதல்வர் ஆனால் தமிழ்நாட்டுல டாஸ்மார்க் கடை மூடுவாரா . நீர் நிலைகளை தூர் வருவார விவசாய கடன் தள்ளுபடி பண்ணுவாரா, குடி நீர் பிரச்சனை தீர்ப்பாரா முக்கியமா உங்க தமிழன் முதல்வர் ஆனால் ஆந்திர , கேரளா கர்நாடக தண்ணீர் தருவாங்களா மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரியம் அமைக்குமா உங்க தமிழன் கேட்ட வறட்சி நிவாரண நிதி கொடுப்பாங்களா ஒரு மண்ணும் உங்க ஊருக்கு கெடைக்காது பாவம் ரஜினி பயம் எப்ப உங்க ஆளுகளுக்கு போகுமோ அவர் கரெக்டா சொல்லுறார் நான் பேசினாலே அது நியூஸ் ஆகுது உங்களுக்கு புடிக்கலேனா போய் செல் போன் டவர்ல விழுந்து தமிழ் தமிழ் அப்படினு சொல்லிட்டு குதிங்க யாரு கேட்டா அப்ப தான் தமிழ்நாடு உருப்படும்

 • Raman Ganesan - Madurai,இந்தியா

  பெரிய தமிழ் தமிழ் அப்படினு படம் காட்டுறீங்களே அப்புறம் எதுக்குடா ஒரு தெலுங்கு படத்தை பார்த்து 500 கோடி தமிழ்நாட்டுல மட்டும் லாபம் சம்பாதிச்சு கொடுத்திருக்கிங்க இப்ப உங்க சைமன் மருத்துவர், காடு வெட்டி, மரம் வெட்டி வேலை வெட்டி வெளிநாடு உள் நாடு அடுத்த ஸ்டேட் நாம் தமிழன் அவங்க குடும்பம் எங்க போனிங்க போய் உங்க தமிழ் தலைவர் பேரன் நடிச்ச சரவணன் இருக்க பயம் ஏன் பாக்க வேண்டி தானே அப்ப தமிழ் பப பப பப

  • Arb Ragupathi - TIRUPUR,இந்தியா

   SUPER

 • palanivel - madurai,இந்தியா

  SUPER

 • g senthil - mdu

  அப்ப உனக்கு ஒண்ணும் தெரியாதா வெளங்கும்

 • Suman - Mayiladuthurai ,இந்தியா

  அருமை அருமை பணியில் ஈடுபடுவோருக்கு வாழ்த்துக்கள்.

 • Sekar - Maraimalai Nagar

  எத்தனாந் தேதி எத்தனை மணிக்கு எவ்வளவு உயரத்திலேர்ந்து எத்தனை கிமீ வேகத்துல குதிப்பீங்க? நேராவா திரும்பியா தலைகீழாவா பல்டி அடிச்சா? தனிக் குளமா இல்ல BJP குளமா? நீங்களேவா இல்ல சினிமா மாதிரி டூப் போட்டா? இதெல்லாம் கேட்டா இன்னும் முப்பது வருடம் யோசிச்சே காலம் தள்ளிடலாம்னு தோணுதா? உங்க பாணியிலயே சொன்னா இது ட்ரெய்லர்தான். ரிப்போர்ட்டர்கிட்ட மாட்டுன மெயின் பிக்சர் ச்சும்மா அதிரும்.

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  மகிழ்ச்சி ......

 • Jeyakumar - London,யுனைடெட் கிங்டம்

  ஹலோ, காமெடிய எதுக்கு கடைசில வைக்குறீங்க

 • shiva - tirunelveli

  saaniyadi confirm

 • Bala Subramanian - Bangalore,இந்தியா

  உங்க தலைவர் என்ன ஜெனரல் நாலெஸ்ஜ் வளர்த்துக போறரா என்ன விளங்கிடும்

 • MOUNTAINKING - Chennai,இந்தியா

  Ra

 • நன்னெறி - TOKYO,ஜப்பான்

  அப்படி என்றால் தமிழக முதல்வர், எம்பிக்கள், கவர்னர், எதிர்க்கட்சிகள், பாஜக தலைவர்கள் தமிழக மக்கள் இதெல்லாம் டூப்பு ரஜினிதான் டாப்பு போங்கடா டுபாக்கூர்களா? என்ன தினமலரே வெயில் தாங்க முடியலயா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement