Advertisement

வாழ்க்கை படம் : பிரதமரை சந்தித்த சச்சின்

கிரிக்கெட்டில் அசைக்க முடியாத ஒரு ஜாம்பவான சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட சச்சின், இப்போது சினிமாவில் களமிறங்கியுள்ளார். சச்சினின் வாழ்க்கை, 'சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்' என்ற பெயரில் சினிமாவாக உருவாகி உள்ளது. இதில் சச்சின் ரோலில் அவரே நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. வருகிற 26-ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சச்சின் டெண்டுல்கர் இன்று(மே 19-ம் தேதி) சந்தித்து பேசினார். அப்போது தனது வாழ்க்கை படம் குறித்து பிரதமரிடம் எடுத்து கூறினார். பிரதமரும் சச்சின் படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்தார். இதற்கு சச்சின் தன் டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்திருக்கிறார். அதோடு, தான் பிரதமரை சந்தித்த போட்டோவையும் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

    ரொம்ப முக்கியம்டா.. இதெல்லாம் தமிழனுக்கு ஞாபகம் இருக்கும். விவசாயிகளை அம்மணமாக ஓடும் நிலைக்கு தள்ளிய இவருக்கு பார்லிமென்ட் பக்கமே எட்டிப்பாக்காத காசுக்கு மட்டையடிக்கும் இந்த கூத்தாடியை பார்க்க நேரம் கிடைக்கிறதாம். நிச்சயம் இதன் எதிரொலி தேர்தலில் ஒலிக்கும்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement