Advertisement

102 நாட்-அவுட்-ல் அசத்தும் அமிதாப்-ரிஷி கபூர்

குஜராத்தி மொழியில் வெளியான படம் 102 நாட் அவுட். இந்தப்படத்தை தழுவி பாலிவுட்டில் 102 நாட் அவுட் படம் உருவாகிறது. இதில் 102 வயது முதியவராக அமிதாப் நடிக்க, அவரது 75 வயது மகனாக ரிஷி கபூர் நடிக்க இருக்கிறார். 102 வயதான அப்பாவுக்கும், 75 வயதான மகனுக்கும் இடையேயான பாசப்போராட்டம் தான் படத்தின் கதை. உமேஷ் சுக்லா இயக்குகிறார். இப்படத்தில் அமிதாப்-ரிஷி கபூரின் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் அமிதாப் மிகவும் வயதானவராக தாடியுடன் தோன்ற, அவருக்கு அருகில் ரிஷி கபூர் அவரை விட சற்று குறைவான முதிர் தோற்றத்தில் இருக்கிறார். தற்போது இந்த ஸ்டில் வலைதளங்களில் டிரெண்ட்டாகி வருகின்றன. மும்பையில் 102 நாட் அவுட் பட ஷூட்டிங் ஆரம்பமாகி உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் படத்தை ரிலீஸ் செய்ய எண்ணியுள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement