Advertisement

திருட்டு விசிடி தகவல் தருபவர்களுக்கு: ரூ.1 லட்சம்பரிசு: விஷால்

சென்னை: தியேட்டர்களில் திருட்டு விசிடி கும்பலை பிடித்து கொடுத்து எப்ஐ.ஆர் பதிவு செய்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.1 லட்சம்பரிசு வழங்கப்படும் என நடிகர் விஷால் கூறியுள்ளார். திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் விஷால் மற்றும் அவரது அணியினர் வெற்றி பெற்றனர். இதற்கான வெற்றி விழாவில் பேசிய விஷால் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் திருட்டு விசிடியை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியிருந்தார். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற விளையாட்டு ஆரம்பம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது: தியேட்டரில் கேமரா வைத்து படத்தை காப்பி செய்து திருட்டு விசிடி தயாரிக்கும் கும்பலை அல்லது நபரை தியேட்டர் நிர்வாகத்திடம் பிடித்து கொடுத்து எப் ஐ ஆர் பதிவு செய்தால் சம்பந்தப்பட்டவருக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் 1 லட்சம் பரிசு வழங்கப்படும் இவ்வாறு விஷால் கூறினார். விழாவில் இயக்குனர்கள் பாலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (18)

 • ssssss - Chennai,இந்தியா

  தமிழக இளைஞர்கள் ஓன்று கூடி படத்தின் டிக்கெட் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டும் இதை தொடர்ந்து நடிகர்களின் சம்பளம் தானாகவே குறையும்.

 • Vaal Payyan - Chennai,இந்தியா

  தமிழ் ராக்கர்ஸ் இருக்க பயம் ஏன்

 • PrasannaKrishnan -

  Increasethetechnicians,cameramanssalary.you...

 • Kalai Aarashan - Quito,ஈக்வடார்

  neengal pakka thirutargal avargal pasi thirutargal avrgalai olikka ungalal mudiyadhu

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  சொன்ன சொல்லை மறக்கமாட்டீங்களே... ஏன் என்றால் திரைப்பட தொழிலில் உள்ளவர்கள் சொல்லும் வார்த்தைகளை நீரில்தான் எழுத வேண்டும் என்று எழுதாத சட்டம் உள்ளது...

 • போபா -

  லாஜிக் படி பாத்தா directorக்கும் கதைக்கும் தான அதிகமாக சம்பளம் குடுக்கணும், சொல்ற வேலைய செஞ்சுட்டு போற actorsக்கு ஏன் அதிக சம்பளம்?

 • போபா -

  ஒரு படத்துக்கு 2 பேர் பெயரிட்டு வந்தா 1000 ரூபா காலி, முதல்ல டிக்கெட் விலைய குறைங்க, theaterல snacks rate குறைங்க

 • Hari Krishnan - Coimbatore,இந்தியா

  உன்னோட ஒரு லட்சம் ஊவா வுக்கு நாங்க காட்டிக்கொடுக்கணும். அப்புறம் அவிங்க ஆளவச்சு வெட்டுவாங்க. அத நாங்க வாங்கி சாகணும். நீ சொகுசா சம்பாதிப்ப.. போ... வேலையப்பாத்திட்டு ...உன்னோட நடிப்பை பாத்தாலும்...பெரிய சிவாஜி கணேசன்...

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  1 லட்சம் தானா ?

 • Vasanth Saminathan - Trivandrum,இந்தியா

  அட லூசே விசிடி போய், பென் டிரைவ் போய் தமிழ் ராக்கர்ஸ் டாரெண்ட்லாம் வந்தாச்சு. அதுல கூட உன் படத்தை பாக்குறது டைம்வேஸ்ட்.

 • விருமாண்டி - மதுரை,இந்தியா

  விஷால் காமெடி பீசு

 • LakshmiKumar -

  Vaanga

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  சினிமா துறையில் கருப்பு பணம் பதுக்குவோரை பிடித்து கொடுத்தால் 10 லச்சம் பரிசு.

 • விருமாண்டி - மதுரை,இந்தியா

  திரை அரங்கில் டிக்கெட் விலை 1000 , 2000 இருக்கும்வரை திருட்டு விசிடி ஒழிக்க முடியாது .அப்படியே உங்கள் சம்பள தொகை குறைத்துக் கொல்லுங்கள் பாப்போம் .அதுக்கு விஷால் ஒப்புக்கொள்வாரா??

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  சில தியேட்டர்களில் நிர்வாகமே அப்படி செய்ததாக நீங்கள் புகார் கூறினீர்கள்.

 • Pulikutty - Mumbai,இந்தியா

  சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்க பார்க்கிறார். அதுக்கு பதிலாக குறைந்த டிக்கெட் விலையில் பொதுமக்களுக்கு திரை படத்தை வெளியிடும் தியேட்டர் உரிமையாளருக்கு பரிசு வழங்கப்படும்-னு அறிவிக்க வேண்டியது தானே? அனைவரும் தியேட்டர் வந்து பார்க்கும்படி டிக்கெட் கட்டணத்தை குறைதல், திருட்டு CD அதுவே மறைந்து விடும். சரி புதிய படத்தை வெளியிடும் இணையதளத்தை முடக்குவதாக சொன்னாரே அது என்ன ஆச்சு?

 • Sathish - Coimbatore ,இந்தியா

  Seeders, peers, trackers என அனைவரும் torrent மயமாகிக்கொண்டு வர்றாங்க இவனுங்க திருட்டு VCD பிடிச்சு கொடுத்தால் பரிசு கொடுப்பாங்கலாம். ரொம்ப முன்னேறிட்டீங்க.

  • BNathanReddy - ,

   what happened to blocking of Tamilrockers.com though the ISP block the site they come with another website onuum Panna mudiyathu Vishal

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement