Advertisement

கத்தி தெலுங்கு ரீமேக்கை இயக்கும் விவி விநாயக்

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிகை சமந்தா நடிப்பில் வெற்றி பெற்ற கத்தி திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குனர் விவி விநாயக் இயக்கப் போவதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய்காந்த் நடிப்பில் ரமணா திரைப்படம் தெலுங்கில் தாகூர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. டோலிவுட்டிலும் வெற்றி பெற்ற தாகூர் படத்தை இயக்குனர் விவி விநாயக் இயக்கியிருந்தார். தற்போது மீண்டும் இயக்குனர் ரமணா படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தை இயக்குனர் விவி விநாயக் நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் இயக்கவுள்ளார். தற்போது அகில் நடிக்கும் படத்தை இயக்கி வரும் விவி விநாயக் அப்படத்தை முடித்த பின்னர் கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கவனம் செல்லுவார் என டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement