Advertisement

25 வருடங்களுக்குப் பிறகு இணையும் விஜய் - ராதிகா

80 களில் நடிக்க வந்த நடிகைகளில் இன்னும் திரையுலகில் நீடித்து நிலைத்திருக்கும் நடிகைகள் மிக குறைவு. இந்த விஷயத்தில் ராதிகா ஆச்சர்யமான விதிவிலக்கு.தென்னிந்திய மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை புரிந்தவர் என்ற பெருமை ராதிகாவுக்கு உண்டு. தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ள ராதிகா, இதுவரை விஜய் ஹீரோவாக நடித்து வெளிவந்திருக்கும் 57 படங்களில் எந்தப் படத்திலும் நடித்ததில்லை என்றும், தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தில் விஜய்யுடன் நடிக்கவிருக்கிறார் ராதிகா என்றும் சொல்லப்பட்டது. உண்மையில், விஜய் படத்தில் ராதிகா இணைவது இது முதல்முறை அல்ல.ஏற்கனவே ஒரு படத்தில் ராதிகாவும் விஜய்யும் இணைந்து நடித்துள்ளனர்.ராதிகா கதாநாயகியாக நடித்த ஒரு படத்தில் விஜய் குழந்தை நட்சத்திரமாக ஏற்கெனவே நடித்திருக்கிறார். 1988 ஆம் வருடம் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ராம்கி, ராதிகா, நிழல்கள் ரவி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் 'இது எங்கள் நீதி'. இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்திருக்கிறார். அப்படத்தின் ஒரு காட்சியில் ராதிகாவுடன் இணைந்து விஜய் ஒரு பாடலில் நடனமும் ஆடி இருக்கிறார். 'இது எங்கள் நீதி' படத்திற்குப் பிறகு சரியாக 25 வருடங்கள் கழித்து மீண்டும் விஜய்யும், ராதிகாவும் இணைந்து நடிக்கின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement