Advertisement

‘ஜெட் ஏர்வேஸ்’ நிதியறிக்கை வெளியீடு தள்ளிவைப்பு ‘ஆடிட்’ குழு ஒப்புதல் அளிக்க மறுப்பு

புதுடில்லி:ஜெட் ஏர்­வேஸ் நிறு­வ­னத்­தின் காலாண்டு நிதி நிலை அறிக்­கையை அங்­கீ­க­ரிக்க, ‘ஆடிட்’ குழு மறுத்­துள்­ள­தால், அதன் வெளி­யீடு தள்ளி வைக்­கப்­பட்­டுள்­ளது.

நரேஷ் கோயல் தலை­மை­யி­லான ஜெட் ஏர்­வேஸ் நிறு­வ­னம், 2017- – 18ம் நிதி­யாண்­டின், ஜனவரி – மார்ச் காலாண்­டில், 1,000 கோடி ரூபாய்க்­கும் அதி­க­மான இழப்பை சந்­தித்­தது.இழப்பு, மேலும் அதிகரிக்க வாய்ப்­புள்­ள­தாக ஆய்வு நிறு­வ­னங்­கள் தெரி­வித்­தி­ருந்­தன.

கிசுகிசு

அதற்­கேற்ப, ஜெட் ஏர்­வேஸ், அதன் விமா­னி­கள்,பொறி­யா­ளர்­கள் ஆகி­யோ­ரி­டம் ஊதி­யத்தை குறைத்­துக் கொள்ள கோரி­ய­தாக தக­வல் வெளி­யானது. மேலும், 60 நாட்­களுக்கு மட்­டுமே விமான சேவையை இயக்­கு­வ­தற்­கான நிதி உள்­ள­தா­க­வும் கிசு­கி­சுக்­கப்­பட்­டது.இந்த தக­வல்­களை மறுத்த ஜெட் ஏர்­வேஸ், ஆக., 9ல் பங்­கு­தா­ரர்­க­ளின் ஆண்டு பொதுக்­குழு கூட்­டத்­தில், கடந்த நிதி­யாண்­டின் நிதி நிலை அறிக்கை வெளி­யி­டப்­படும் என, அறி­வித்­தது. ஆனால் அவ்­வாறு வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

இது குறித்து, மும்­பை­யில் நடை­பெற்ற பொதுக் குழு கூட்­டத்­தில், நரேஷ் கோயல் பேசி­ய­தா­வது:சர்­வ­தேச நில­வ­ரங்­கள் கார­ண­மாக, நிறு­வ­னத்­தின் செல­வி­னம் கையை மீறி போய் விட்­டது. கச்சா எண்­ணெய் விலை, 16 சத­வீ­தம் உயர்ந்­துள்­ளது.இதன் தாக்­கத்­தால், விமான எரி­பொ­ருள் செல­வி­னம் அதி­க­ரித்­துள்­ளது. அத்­து­டன், டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்­பின் சரி­வால், வருவாய் குறைந்­துள்­ளது.

இத்­த­கைய சுமையை, நுகர்­வோர் தலை­யில் சுமத்த முடி­யாத நிலை­யில், விமான துறை­யில் போட்டி நில­வு­கிறது. அத­னால், விமான பய­ணக் கட்­ட­ண­மும் உயர்த்­தப்­பட­வில்லை.

பங்கு விலை

இந்­நி­லை­யில், கடந்த நிதி­யாண்­டின் நிதி நிலை அறிக்­கை­யில், ஒரு சில அம்­சங்­க­ளுக்கு தீர்வு காண வேண்­டி­யுள்­ளது. இதன் கார­ண­மாக, தணிக்கை செய்­யப்­பட்ட, கடந்த நிதி­யாண்­டின் நிதி நிலை அறிக்­கையை, ஆடிட் குழு, நிறு­வ­னத்­தின் இயக்­கு­னர் குழு­வுக்கு பரிந்­துரைக்­க­வில்லை.அத­னால், நிதி நிலை அறிக்­கையை வெளி­யிட­வில்லை. விரை­வில் பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காணப்­பட்டு, நிதி நிலை அறிக்கை வெளி­யி­டும் தேதி அறி­விக்­கப்­படும்.இவ்­வாறு அவர் தெரிவித்­தார்.

இதை­ய­டுத்து, நேற்று, மும்பைபங்குச் சந்தையில், ஜெட் ஏர்­வேஸ் பங்கு விலை, மூன்று ஆண்­டு­களில் இல்லாத அள­விற்கு, 13.3 சத­வீதம் சரி­வடைந்து, 261.60 ரூபாயாக வீழ்ச்சி கண்­டது.

பிரச்னைகள்

மூத்த அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:வரு­வாய் அல்­லது செல­வி­னத்­தில், சில பிரச்­னை­கள் ஏற்­பட்­டி­ருக்­க­லாம். உதா­ர­ண­மாக, வட்­டிச் செல­வி­னங்­களில் இது போல நடக்­க­லாம். ஒரு நிறு­வ­னம், இழப்பை தெரி­விக்க விரும்­பாத பட்­சத்­தில், அதற்கு ஆடிட் குழு ஒப்புதல் அளிக்­காது.இவ்­வாறு அவர் கூறினார்.

இரண்டு நிறுவனங்கள்

ஜெட் ஏர்­வேஸ் நிறு­வ­னத்­தின் வரவு – செலவு கணக்கை, பி.எஸ்.ஆர்., அண்ட் கோ மற்­றும் டி.டி.எஸ்., அண்ட் அசோ­சி­யேட்ஸ் என்ற நிறு­வ­னங்­கள் தணிக்கை செய்­கின்­றன. அதை, நிறு­வ­னத்­தின் மூன்று இயக்­கு­னர்­கள் அடங்­கிய, ஆடிட் குழு, இயக்­கு­னர் குழு­வுக்கு பரிந்­து­ரைக்­கும். அதன் பின்­னரே, பங்­கு­தா­ரர்­கள் கூட்­டத்­தில், நிதி நிலை அறிக்கை வெளி­யி­டப்­படும்.
பாத­கமா?

ஜெட் ஏர்­வேஸ் நிறு­வ­னம், பங்­கு­தா­ரர்­க­ளுக்கு பாத­க­மான செய்­தியை தெரி­விக்க விரும்­பா­மல் இருக்­க­லாம் அல்­லது அத்­த­கைய தக­வலை மறைக்கநினைத்­தி­ருக்­க­லாம்.
ஸ்ரீராம் சுப்­ர­ம­ணி­யம், ‘இன்­க­வர்ன் ரீசர்ச்’

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Vaidhyanathan Sankar - chennai,இந்தியா

    இதுvuம் வாடிக்கையாளர் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத விமான சேவைகள் ஒன்றுமுன்பதிவு செய்த பயணிகளின் பெயர்களை நீக்குவதும்,முன்னறிவிப்பு இல்லாமல் சேவைகளை திடீரென ரத்து செய்வதும் இந்த விமான sevaiyil இல் வழக்கமாக நடப்பதே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement