Advertisement

மின் துறை நிலக்கரி இறக்குமதி குறைந்தது

புதுடில்லி:நடப்பு நிதி­யாண்­டின் முதல் காலாண்­டில், மின் துறையின் நிலக்கரி இறக்­கு­மதி, 14 சத­வீ­தம் குறைந்­துள்­ளது.

இது குறித்து, மத்­திய நிலக்­கரி துறை அமைச்­சர் பியுஷ் கோயல், பார்­லி­மென்­டில் கூறி­ய­தா­வது:நடப்பு, 2018- – 19ம் நிதி­யாண்­டின், ஏப்ரல் – ஜூன் வரை­யி­லான முதல் காலாண்­டில், மின் துறை­யின் நிலக்­கரி இறக்­கு­மதி, 2017 -– 18ம் நிதி­யாண்­டின் இதே காலாண்டை விட, 14 சத­வீ­தம் குறைந்­துள்­ளது.

கடந்த, 2014 – -15ம் நிதி­யாண்­டில், நிலக்­கரி இறக்­கு­மதி, 21.77 கோடி டன்­னாக இருந்­தது. இது, 2016 -– 17ம் நிதி­யாண்டில், 19.09 கோடி டன்­னாக குறைந்­தது. ஆனால், கடந்த நிதி­யாண்­டில், 20.80 கோடி டன்­னாக அதி­க­ரித்­தது.மின் துறை­யின் நிலக்­கரி இறக்­கு­மதி தொடர்ந்து குறைந்து வரு­கிறது. உள்­நாட்­டில், நிலக்­கரி சப்ளை அதி­க­ரித்­துள்­ளதே இதற்கு கார­ணம்.

கடந்த, 2013 --– 14ம் நிதி­யாண்­டில், நிலக்­கரி உற்­பத்தி, 56.57 கோடி டன்­னாக இருந்­தது. இது, கடந்த நிதி­யாண்­டில், 67.64 கோடி டன்­னாக அதி­க­ரித்­துள்­ளது. இதன்­படி, நான்கு ஆண்­டு­களில், நிலக்­கரி உற்­பத்தி, 11.07 கோடி டன் உயர்ந்­துள்­ளது.அதே­ச­ம­யம், 2009 – 10 முதல், 2013 -– -14 வரை­யி­லான நான்கு நிதி­யாண்­டு­களில், நிலக்­கரி உற்­பத்தி, 3.37 கோடி டன் என்ற அள­விற்கே அதி­க­ரித்­தி­ருந்­தது.

கோல் இந்தியா

பொதுத் துறை­யைச் சேர்ந்த கோல் இந்­தியா நிறு­வ­னத்­தின் நிலக்­கரி உற்­பத்­தி­யும், ஆண்­டுக்கு ஆண்டு உயர்ந்து வரு­கிறது.இந்­நி­று­வ­னம், 2013 --– 14ம் நிதி­யாண்­டில், 46.24 கோடி டன் நிலக்­க­ரியை உற்­பத்தி செய்­தது. இது, கடந்த நிதி­யாண்­டில், 56.73 கோடி டன்­னாக உயர்ந்­துள்­ளது.நடப்பு நிதி­யாண்­டில், ஏப்ரல் – ஜூலை வரை­யி­லான நான்கு மாதங்­களில், கோல் இந்­தி­யா­வின் நிலக்­கரி உற்­பத்தி, 17.74 கோடி டன்­னாக அதி­க­ரித்­துள்ளது.

இது, கடந்த நிதி­யாண்­டின், இதே காலத்­தில் மேற்­கொண்ட உற்­பத்­தியை விட, 14.1 சத­வீ­தம் அதி­கம்.இவ்­வாறு அவர் கூறினார்.இறக்­கு­மதி செய்­யப்­படும் நிலக்­க­ரிக்கு, பல்­வேறு அம்­சங்­கள் அடிப்­படை­யில், விலை நிர்­ண­யம் செய்­யப்­ப­டு­கிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement