Advertisement

தொழில் துறை உற்பத்தி 7 சதவீதமாக அதிகரிப்பு

புதுடில்லி:கடந்த ஜூன் மாதம், நாட்­டின் தொழில் துறை உற்­பத்தி, 7 சத­வீ­த­மாக வளர்ச்சி கண்­டுள்­ளது. இது, மே மாதம், 3.2 சத­வீ­தம்; மறு­ம­திப்­பீட்­டில், 3.9 சத­வீ­த­மாக இருந்­தது.

நடப்பு நிதி­யாண்­டின், ஏப்ரல் – ஜூன் காலாண்­டில் தொழில்­ துறைஉற்­பத்தி வளர்ச்சி, 5.2சத­வீ­த­மாக உள்­ளது.கடந்த ஜூன் மாதம், தயா­ரிப்பு துறை உற்­பத்தி, 6.9 சத­வீ­த­மாக வளர்ச்சி கண்­டுள்­ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்­தில், 0.7 சத­வீ­தம் பின்னடைவை கண்­டி­ருந்­தது.இதே காலத்­தில், மின் துறை உற்­பத்தி, 2.1 சதவீதத்­தில் இருந்து, 8.5 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது.அது­போல, நிலக்கரி துறை­யின் வளர்ச்­சி­யும் சிறப்­பாக இருந்­தது. இத்­துறை, கடந்த ஜூன் மாதம், 6.6 சத­வீத வளர்ச்­சியை கண்­டுள்­ளது.

இது, கடந்த ஆண்டு, இதே மாதத்­தில், 0.1 சதவீத­மாக இருந்­தது.தொழில் துறை உற்­பத்தி, 23 துறை­கள் செயல்­படும் விதத்தை வைத்து மதிப்­பி­டப்­ப­டு­கிறது.கடந்த ஜூன் மாதம், பெரும்­பான்மை துறை­கள், சிறப்­பாக வளர்ச்சி கண்­டுள்­ளன. இத­னால், ஒட்­டு­மொத்த தொழில் துறை உற்­பத்தி, அபார வளர்ச்சி கண்­டுள்­ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement