Advertisement

ஏழு கோடி முட்டை தேக்கம் தின­மும் பல லட்­சம் இழப்பு

நாமக்­கல்:வட­மா­நி­லங்­களில், ‘ஸ்ரா­வன்’ விர­தம் கடைப்­பி­டிப்­ப­தால் நுகர்வு கடு­மை­யாக சரிந்து, பண்­ணை­களில், முட்­டை­கள் தேக்­க­ம­டைந்­துள்­ளன.நாமக்­கல், தேசிய முட்டை ஒருங்­கி­ணைப்­புக்­குழு (நெக்) கொள்­முதல் விலையை நிர்­ணயம் செய்­கிறது.

ஜூலை, 1ல், 440; 9ல், 445; 12, 450; 14ல், 455; 16ல், 460; 19ல், 465; 21ல், 470; 24ல், 475; 26ல், 480 என, படிப்­ப­டி­யாக உயர்ந்த கொள்­மு­தல் விலை, 30ல், 10, ஆக., 2ல், 20, 4ல், 30 என, சரிந்து, 420 காசாக நிர்­ண­யிக்­கப்­பட்­டது.இந்­நி­லை­யில், கடந்த, 6ல், 30 காசு, நேற்று முன்­தி­னம், 20 காசு குறைக்­கப்­பட்டு, கொள்­மு­தல் விலை, 370 காசாக நிர்­ண­யிக்­கப்­பட்­டது. இது, மேலும் குறைய வாய்ப்­புள்­ள­தால், பண்­ணை­யா­ளர்­கள் கவலையடைந்­துள்­ள­னர்.

இது­ கு­றித்து, தமிழ்­நாடு முட்டை பண்­ணை­யா­ளர்­கள் நலச்­சங்­கத் தலை­வர் சின்­ராஜ் கூறி­ய­தா­வது:லாரி­கள் ஸ்டி­ரைக்­கால், பண்­ணை­களில், ஏழு கோடி முட்­டை­கள் தேக்­க­ம­டைந்­துள்­ளன. அதன் மூலம், பண்­ணை­யா­ளர்­களுக்கு தின­மும், 28 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்­பட்­டுள்­ளது.குறிப்­பாக, வட­மா­நி­லங்­களில், ‘ஸ்ரா­வன்’ விர­தம் கடைப்­பி­டிப்­ப­தால், நுகர்வு சரிந்து, முட்டை விலை குறைக்­கப்­பட்­டுள்­ளது.

வட மாநி­லங்­களில், விற்­பனை போக மீத­முள்ள முட்­டை­களை, குளிர்­ப­தன கிடங்­கில் வைத்­து­வி­டு­வர். 10 நாட்­களில் இச்­சூழ்­நிலை சீராகி, முட்டை கொள்­முதல் விலை உய­ரும். விலை மேலும், 20 காசு குறைய வாய்ப்­புஉள்­ளது.இவ்­வாறு, அவர்­கள் கூறி­னார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement