Advertisement

ஐ.எஸ்.ஓ., தரச் சான்றிதழுக்கு முழு கட்டணமும் மானியம்

ற்­பத்தி பொருட்­களின் தரத்தை உயர்த்த, ஐ.எஸ்.ஓ., 9001, 14001 தரச்­சான்­றி­தழ் பெறும் குறு, சிறு மற்­றும் நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு, சான்­றி­தழ் பெறு­வ­தற்­கான கட்ட­ணம் முழு­வ­தையும், தமி­ழக அரசு திரும்ப வழங்­கு­கிறது என, தொழில் மற்றும் வணி­கத் துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.
தமி­ழ­கத்­தில், எம்.எஸ்.எம்.இ., துறை­யின் கீழ் பதிவு செய்த குறு, சிறு மற்­றும் நடுத்­தர நிறு­வ­னங்­கள், 18.5 லட்­சம் உள்­ளன. பதிவு செய்­யா­மல், தமிழ­கம் முழு­வ­தும், 50 லட்­சம் நிறு­வ­னங்­கள் செயல்­படு­வ­தாக, மத்­திய அர­சின் ஆய்­வில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், உற்­பத்தி பொருட்­க­ளின் தரத்தை உயர்த்த, தமி­ழக அரசு திட்ட­மிட்­டுள்­ளது.இது குறித்து, அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது:குறு, சிறு மற்­றும் நடுத்­தர நிறு­வ­னங்­கள் தயா­ரிக்­கும் பொருட்­க­ளின் தரத்தை உயர்த்த, தமி­ழக அரசு திட்­ட­மிட்­டுள்­ளது. இதற்­காக, ஐ.எஸ்.ஓ., 9001, 14001 தரச் சான்­றி­தழ்­கள் பெற, நிறு­வ­னங்­களுக்கு அறி­வு­றுத்­தப்­ப­டு­கிறது.

அவ்­வாறு பெறும் சான்றி­த­ழுக்கு ஆகும் கட்ட­ணச் செலவு முழு­வ­தும், தமிழக அரசு திரும்ப வழங்க உள்ளது. இந்த புதிய திட்­டம், நடப்பு ஆண்டு முதல் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட உள்­ளது. இதன் மூலம், உற்­பத்தி பொருட்­க­ளின் தரத்தை உயர்த்த முடி­யும் என, அரசு கரு­து­கிறது.இவ்­வாறு அவர்­கள் கூறினர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement