Advertisement

உயர்வுடன் துவங்கிய பங்குச்சந்தைகள்

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தும், நிப்டி 11,000 புள்ளிகளுக்கு மேலும் உயர்வுடன் துவங்கி உள்ளன.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 106.61 புள்ளிகள் உயர்ந்து 36,480.05 புள்ளிகளாகவும், நிப்டி 24.40 புள்ளிகள் உயர்ந்து 11,004.90 புள்ளிகளாகவும் உள்ளன. அனைத்து துறை பங்குகள் உயர்வுடனேயே காணப்படுகின்றன. உலோகம், ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளின் பங்குகள் ஏற்றத்துடனேயே காணப்படுகின்றன.

இருப்பினும் முற்பகல் நிலவரத்தின் போது உலோகத்துறை பங்குகளின் முதல் காலாண்டு நிகரலாப கணக்கு வெளியிடப்பட்டது. 13 சதவீதம் வரை சரிந்ததால் நிப்டி 11,000 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement