Advertisement

இணைய தொலைபேசி சேவை பி.எஸ்.என்.எல்., அறிமுகம்

புதுடில்லி:பொதுத் துறை­யைச் சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., நிறு­வ­னம், முதன் முத­லாக, இணை­யம் வாயி­லான தொலை­பேசி சேவையை துவக்­கி­யுள்­ளது.
இதன் மூலம், பி.எஸ்.என்.எல்., வாடிக்­கை­யா­ளர்­கள், மொபைல் போனில், ‘விங்ஸ்’ என்ற, ‘ஆப்’பை பதி­வி­றக்கி, நாட்­டில் உள்ள எந்த நிறு­வ­னத்­தின் தொலை­பேசி எண்­ணுக்­கும் பேச­லாம்.இந்த சேவைக்­கான பதிவு, வரும், 25ல் துவங்க உள்­ள­தாக, பி.எஸ்.என்.எல்., தெரி­வித்­துள்­ளது.இது குறித்து, மத்­திய தொலை தொடர்பு துறை அமைச்­சர், மனோஜ் சின்ஹா கூறி­ய­தா­வது:
தொலை தொடர்பு சேவை துறை­யில் கடு­மை­யான போட்டி நில­வு­கிறது. இந்த நிலை­யி­லும், இச்­சந்­தை­யில் தன் பங்­க­ளிப்பை, பி.எஸ்.என்.எல்., உயர்த்தி வரு­வது பாராட்­டத்­தக்­கது. இந்நி­று­வ­னம் தற்­போது, இணை­யம் வாயி­லான தொலை­பேசி சேவையை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது. இதன் மூலம், பி.எஸ்.என்.எல்., வாடிக்­கை­யா­ளர்­கள், ‘சிம்’ இல்­லா­மல், எந்த தொலை­பேசி எண்­ணிற்­கும் பேச­லாம்.இதற்கு முன், குறிப்­பிட்ட, ‘ஆப்’பை பதி­வி­றக்கி வைத்­தி­ருப்­போர் இடையே தான் பேச முடி­யும்; தொலை­பேசி எண்­ணில் தொடர்பு கொண்டு பேச முடி­யாது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement