Advertisement

உங்களுக்காக காத்திருக்கிறது தாய்லாந்து! கோவை தொழிற்துறையினருக்கு அழைப்பு

கோவை:‘தாய்­லாந்து நாட்­டில், தொழில் துவங்­கு­வ­தற்­கான வாய்ப்பை, கோவை தொழில் துறை­யி­னர் பயன்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும்’ என, அழைப்பு விடப்­பட்­டுள்­ளது.
கோவை, ரேஸ்­கோர்ஸ் தனி­யார் ஓட்­ட­லில் நடந்த நிகழ்ச்­சி­யில், கோவை சேம்­பர் ஆப் காமர்ஸ் (ஐ.சி.சி.ஐ.சி.,), கோவை மாவட்ட சிறு தொழில்­கள் சங்­கம் (கொடீ­சியா) மற்­றும் இந்தோ தாய் சேம்­பர் ஆப் காமர்ஸ் (ஐ.டி.சி.சி.,) அமைப்­பு­கள், புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் மேற்­கொண்­டன.ஐ.டி.சி.சி.,யின் முன்­னாள் செய­லர் தேவ­தாஸ் பேசு­கை­யில், ‘‘கடந்­தாண்டு மட்­டும், இந்­தியா – தாய்­லாந்து இடையே, 820 கோடி அமெ­ரிக்க டால­ருக்கு, ஏற்­று­மதி,- இறக்­கு­மதி வர்த்­த­கம் நடந்­தி­ருக்­கிறது.
இந்த ஒப்­பந்­தம் மூலம், கோவை­யில் உற்­பத்தி செய்­யப்­படும் பம்பு, ஜவுளி ரகங்­கள் உட்­பட பல பொருட்­களை, தாய்­லாந்­துக்கு ஏற்­று­மதி செய்யலாம்.தாய்­லாந்­தில் உற்­பத்தி செய்­யப்­படும், குறைந்த விலை­யி­லான விவ­சாய கரு­வி­கள் உள்­ளிட்ட பொருட்­களை, இங்கு இறக்­கு­மதி செய்து வர்த்­த­கம் செய்­ய­வும் வாய்ப்பு கிடைக்­கும்,’’ என்­றார்.
ஐ.டி.சி.சி.,யின் தலை­வர் பூல் பேசு­கை­யில், ‘‘தாய்­லாந்­தில் தொழில் துவங்­கு­வ­தற்­கான உரி­மம் அனைத்­தும், ஒரே நாளில் கிடைத்து விடும். அங்கு தொழில் துவங்­கி­னால், முதல் ஏழு ஆண்­டு­ க­ளுக்கு, வரு­மான வரி செலுத்த வேண்­டி­ய­து இல்லை.
‘‘தாய்­லாந்­தில் உற்­பத்தி செய்­யப்­படும் பொருட்­களை, உல­கின் பல்­வேறு நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்ய வரி சலுகை வழங்­கப்­பட்­டி­ருக்­கிறது.‘‘இந்த வாய்ப்பை, கோவை தொழில் துறை­யி­னர் பயன்­ப­டுத்தி, அங்கு தொழிற்­சா­லை­கள் நிறுவ வேண்­டும்,’’ என்­றார்.ஐ.சி.சி.ஐ.சி., தலை­வர் வனிதா மோகன், கொடீ­சியா முன்­னாள் தலை­வர் சுந்­த­ரம், ஐ.டி.சி.சி., முன்­னாள் செய­லர் தேவ­தாஸ், கொடீ­சியா தலை­வர் ராம­மூர்த்தி உட்­பட, பலர் பங்­கேற்­ற­னர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement