Advertisement

மஞ்சள் ஏலத்தில் மின்னணு பரிவர்த்தனை

ஈரோடு: பெருந்­துறை ஒழுங்கு முறை விற்­பனை கூடத்­தில், மின்­னணு முறை­யில் பண பரி­வர்த்­தனை துவங்­கி­யது முதல், 75.12 கோடி ரூபாய் மதிப்­பில், மஞ்­சள் ஏலம் நடந்­துள்­ளது.இது­பற்றி, மாவட்ட விற்­பனை குழு செய­லர் மற்­றும் துணை இயக்­கு­னர் சின்­ன­சாமி கூறி­ய­தா­வது: பெருந்­துறை ஒழுங்கு முறை விற்­பனை கூடத்­தில், கடந்­தாண்டு மார்ச், 8 முதல், மின்­னணு பரி­வர்த்­தனை மூலம், மஞ்­சள் ஏலத்­துக்­கான தொகை, விவ­சாயி கணக்­கில் வரவு வைக்­கப்­ப­டு­கிறது. இதன் மூலம், பிடித்­தம் ஏதும் இன்றி, முழு­மை­யான தொகை, விவ­சா­யிக்கு சென்­று அடை­கிறது.நேற்று முன்­தி­னம் வரை, 5,341 விவ­சா­யி­க­ளுக்கு, ஒரு லட்­சத்து, 5,600 குவிண்­டால் மஞ்­ச­ளுக்கு, 75 கோடியே, 11 லட்­சத்து, 78 ஆயி­ரத்து, 858 ரூபாய்க்கு மின்­னணு பரி­வர்த்­தனை மூலம், பணம் பட்­டு­வாடா செய்­யப்­பட்­டுள்­ளது.தேசிய வேளாண் சந்தை எனப்­படும், ‘இ–நாம்’, இங்கு அமல்­ப­டுத்­தப்­பட்டு, தேசிய அள­வி­லான வியா­பா­ரி­கள், இங்கு மஞ்­சளை ஏலம் எடுப்­ப­தற்­கான பணி மேற்­கொள்­ளப்­பட்­டு உள்­ளது.விவ­சா­யி­கள் மற்­றும் வியா­பா­ரி­க­ளி­டம் முழு அள­வில் வங்கி கணக்கு விப­ரம், ‘ஆதார்’ அட்டை எண் போன்­றவை பெறப்­பட்டு, இப்­ப­ரி­வர்த்­தனை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.இது­போன்று, இம்­மா­வட்­டத்­தில் உள்ள, 18 ஒழுங்கு முறை விற்­பனை கூடங்­க­ளி­லும், மின்­னணு பரி­வர்த்­த­னை­யில், பணம் பரி­மாற்­றத்தை செயல்­ப­டுத்த தேவை­யான பணி­கள் நடந்து வரு­கின்­றன.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement