Advertisement

போலி, ‘காதி’ துணிகள் விற்பனை : 222 நிறுவனங்களுக்கு, ‘நோட்டீஸ்’

புதுடில்லி: ‘‘கடந்த இரண்­டரை ஆண்­டு­களில், ‘காதி’ என்ற பெய­ரில் போலி­யாக துணி­கள், ஆடை­கள் ஆகி­ய­வற்றை விற்­பனை செய்த, 222 நிறு­வ­னங்­க­ளுக்கு, ‘நோட்­டீஸ்’ அனுப்­பப்­பட்­டுள்­ளது,’’ என, காதி கிரா­மோத்­யோக் ஆணைய தலை­வர், வி.கே.சக்­சேனா தெரி­வித்­து உள்­ளார்.
அவர் மேலும் கூறி­ய­தா­வது:பல நிறு­வ­னங்­கள், காதி பொருட்­கள் எனக் கூறி, மக்­களை ஏமாற்­று­கின்­றன. ஆணை­யத்­தின் அங்­கீ­கா­ரம் பெற்ற நிறு­வ­னங்­கள் மட்­டுமே, காதி முத்­தி­ரை­யு­டன், காதி பொருட்­களை விற்­பனை செய்ய வேண்­டும். இந்த உரி­மத்­திற்­காக, குறிப்­பிட்ட கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­ப­டு­கிறது.ஆனால், விற்­ப­னை­யில் எவ்­வித பங்­கும் கோரப்ப­டு­வ­தில்லை. வசூ­லிக்­கப்­படும் தொகை, கைத்­தறி நெச­வா­ளர்­க­ளின் நல்­வாழ்­விற்கு பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.பல நிறு­வ­னங்­கள், கையால் நெசவு செய்த காதி துணி­கள் எனக் கூறி, விற்­கின்­றன. அவ்­வாறு விற்­ப­தாக இருந்­தா­லும், ஆணை­யத்­தின் காதி முத்­திரை உரி­மத்­திற்கு விண்­ணப்­பிக்க வேண்­டும்.சட்ட விரோ­த­மாக, ‘சர்க்கா’ முத்­தி­ரை­யு­டன், காதி எனக் கூறி, ஆடை­களை விற்­பனை செய்த, ‘பேப் இந்­தியா’ நிறு­வ­னம் மீது, 525 கோடி ரூபாய் இழப்­பீடு கோரி வழக்கு தொட­ரப்­பட்­டுள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement