Advertisement

தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 சரிவு

சென்னை : தங்கம் விலை கடந்த சில தினங்களாக ரூ.3000-ஐ தாண்டி சவரன் ரூ.24 ஆயிரத்திற்கு விற்பனையான நிலையில் இன்று(மே 16) சற்று குறைந்துள்ளது.
சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,967-க்கும், சவரனுக்கு ரூ.264 சரிந்து ரூ.23,736-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.31,170-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து ரூ.43.00-க்கு விற்பனையாகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement