Advertisement

சென்செக்ஸ் 156 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவை சந்தித்தன.
அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவு, அதன் எதிரொலியாக ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவாலும், கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டுள்ள குளறுபடியாலும், முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்ததாலும் இன்றைய வர்த்தகம் சரிவுடன் முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 156 புள்ளிகள் சரிந்து 35,387.88-ஆகவும், நிப்டி 60.75 புள்ளிகள் சரிந்து 10,741.10-ஆகவும் முடிந்தன.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement