Advertisement

இயற்கை எரிவாயு வர்த்தக சந்தை ஆலோசனை நிறுவனங்களுக்கு அழைப்பு

புதுடில்லி : இந்­தி­யா­வில் முதன் முறை­யாக, இயற்கை எரி­வாயு வர்த்­தக சந்தை துவக்­கப்­பட உள்­ளது.

இது குறித்து, பெட்­ரோ­லி­யம் மற்­றும் இயற்கை எரி­வாயு ஒழுங்கு முறை ஆணை­யம் வெளி­யிட்­டு உள்ள அறிக்கை:இந்­தி­யா­வில், எரி­வாயு பயன்­பாட்­டில், இயற்கை எரி­வா­யு­வின் பங்கு, 6 சத­வீ­த­மாக உள்­ளது. இதை, 2030ல், 15 சத­வீ­த­மாக உயர்த்த, மத்­திய அரசு இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது.
இதை­யொட்டி, இயற்கை எரி­வாயு பயன்­பாட்டை அதி­க­ரிக்­க­வும், அதன் விலையை, ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் இல்­லா­மல், சந்தை சார்ந்­த­தா­க­ மாற்­ற­வும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.இதற்­காக, ஜி.டி.எச்.இ., என்ற, இயற்கை எரி­வாயு வர்த்­தக சந்­தையை உரு­வாக்க முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த சந்­தையை அமைப்­ப­தற்­கான வழி­காட்­டு­த­லை­யும், ஆலோ­ச­னை­க­ளை­யும் வழங்க, அனு­ப­வ­முள்ள நிறு­வ­னம் தேர்வு செய்­யப்­படும்.

இதற்­கான ஒப்­பந்தப் புள்ளி கோரப்­பட்­டுள்­ளது. அக்­டோ­ப­ரில் இயற்கை எரி­வாயு சந்தை செயல்­ப­டத் துவங்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

அமெ­ரிக்கா, கனடா, பிரிட்­டன் மற்­றும் ரஷ்­யா­வில் நில­வும் இயற்கை எரி­வாயு விலை­யின் அடிப்­ப­டை­யில், உள்­நாட்­டில் உற்­பத்தி செய்­யப்­படும் இயற்கை எரி­வா­யு­வின் விலையை, மத்­திய அரசு நிர்­ண­யிக்­கிறது.

இறக்­கு­ம­தி­யா­கும் இயற்கை எரி­வாயு விலை, இதை விட, ஒரு மடங்கு அதி­க­மாக உள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது. இந்த ஏற்­றத்­தாழ்வு, இயற்கை எரி­வாயு வர்த்­தக சந்தை செயல்­பாட்­டுக்கு வந்­தால் குறை­யும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement