Advertisement

ரசாயனங்கள் இறக்குமதி மத்திய அரசு விசாரணை

புதுடில்லி : பிரே­சில், தாய்­லாந்து, இந்­தோ­னே­ஷியா ஆகிய நாடு­களில் இருந்து, பெயின்ட் மற்­றும் தோல் தொழிற்சா­லை­களில் பயன்­ப­டுத்­தும் சில வகை ரசா­ய­னங்­கள் அதிக அள­வில் இறக்­கு­மதி ஆவ­தாக, கூறப்­ப­டு­கிறது.

குறைந்த விலை­யில், அள­விற்கு அதி­க­மாக இறக்­கு­ம­தி­யா­கும் ரசா­ய­னங்­க­ளால் பாதிக்­கப்­ப­டு­வ­தாக, உள்­நாட்டு நிறு­வ­னங்­கள் புகார் தெரி­வித்­தி­ருந்­தன. இதை­ய­டுத்து, மத்­திய வர்த்­தக அமைச்­ச­கத்­தின் புல­னாய்வு பிரி­வான, அதிக பொருள் குவிப்பு மற்­றும் வரி­கள் தலைமை இயக்­கு­ன­ர­கம், ஆய்வு மேற்­கொண்­டது. அதில், புகா­ருக்கு அடிப்­படை ஆதா­ரம் உள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

இதை­ய­டுத்து, 2016 ஏப்., – 2017 செப்., வரை, மூன்று நாடு­க­ளின் ரசா­யன இறக்­கு­மதி குறித்த விசா­ர­ணையை துவக்­கி­யுள்­ள­தாக, இயக்­கு­ன­ர­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.விசா­ர­ணை­யில், உள்­நாட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது நிரூ­ப­ண­மா­னால், மூன்று நாடு­க­ளின் ரசா­யன இறக்­கு­ம­திக்கு, அதிக பொருள் குவிப்பு வரி விதிக்­கப்­படும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement