Advertisement

பயணியர் வாகன ஏற்றுமதி 7 ஆண்டுகளுக்கு பின் சரிவு

புதுடில்லி : ஏழு நிதி­யாண்­டு­க­ளுக்கு பின், முதன்­மு­றை­யாக, கடந்த நிதி­யாண்­டில், பய­ணி­யர் வாகன ஏற்­று­மதி, 1.51 சத­வீ­தம் சரிவை சந்­தித்­துள்­ளது.

இது குறித்து, இந்­திய வாகன தயா­ரிப்­பா­ளர்­கள் கூட்­ட­மைப்­பான, ‘சியாம்’ வெளி­யிட்­டுள்ள அறிக்கை:உள்­நாட்டு சந்­தை­யில் அதி­கம் கவ­னம் செலுத்­தி­ய­தா­லும், ஜி.எஸ்.டி.,யின் கீழ், உள்­ளீட்டு வரி உரிய நேரத்­தில் கிடைக்­கா­த­தா­லும், 2017 – 18ம் நிதி­யாண்­டில், பய­ணி­யர் வாகன ஏற்­று­மதி, 7.58 லட்சத்திலிருந்து, 1.51 சத­வீ­தம் குறைந்து, 7.47 லட்சமாக குறைந்­துள்­ளது.

இது, ஏழு ஆண்­டு­க­ளுக்கு பின், முதன்­மு­றை­யாக, பய­ணி­யர் வாகன ஏற்­று­ம­தி­யில் ஏற்­பட்­டுள்ள வீழ்ச்­சி­யா­கும்.இந்த துறைக்கு, 1,000 கோடி ரூபாய் உள்­ளீட்டு வரி மூலம் வர வேண்டி உள்­ளது.மதிப்­பீட்டு நிதி­யாண்­டில்,போர்டு இந்­தியா நிறு­வ­னம், 1.81 லட்சம் வாக­னங்­களை ஏற்­று­மதி செய்­துள்­ளது. இதற்­க­டுத்த இடங்­களில், ‘ஜென­ரல் மோட்­டார்ஸ் இந்­தியா, வோக்ஸ்­வே­கன் இந்­தியா’ ஆகிய நிறு­வ­னங்­கள் உள்­ளன.

அதே சம­யம், 2017 – 18ம் நிதி­யாண்­டில், இரு­சக்­கர வாகன ஏற்­று­மதி, 20.29 சத­வீ­தம் ஏற்­றம் கண்டு, 28.1 லட்சமாக அதி­க­ரித்­துள்­ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்­தில், 23.4 லட்சமாக இருந்­தது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement